தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 juni 2012

கூலிப் போராட்டத்தை நடத்தக் கூடாது, நடத்தினால் அது துரோகம் என்று கூறிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 50)


குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.


விளக்கம் : தாம் வர்க்கப் போராட்டத்தின் எதிரிகள் தான், என்பதை ஒத்துக் கொண்டார். ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக, அவர்களின் கோரிக்கைக்காக போராடிய போது எல்லாம், அதை தலைமை தாங்கியோர் கைது செய்யப்பட்டனர் அல்லது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். கைதானவர்களை அவர்களின் சொந்த பாசிச சிறைகளில் வதைத்தே கொன்றனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்களின் கதையும் இதுதான். சாதிய அமைப்பை பாதுகாப்பதில் புலிகள் பாசிசத்தை தமது அரசியல் வழியாக கொண்டனர். சோசலிச தமிழீழம் என்பது ஏமாற்றும் மோசடி நிறைந்தவை என்பதற்கு புலிகளின் பிரதி தலைவர் மாத்தையா வாக்கு மூலம் தந்தார். ஆனால் நடைமுறை எதார்த்தம் இதை எப்போதும் ஆணி அறைந்தாற் போல் பறைசாற்றியே வந்துள்ளது. புலிகளின் பாசிச அரசியலும், அவர்களின் சொந்த நடைமுறையும் வரலாற்று ரீதியாகவே அவற்றை உறுதி செய்தது. ஏழை எளிய மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் புலிப் பாசிசம், உயர்மட்ட பணக்கார கொள்ளையர்களுக்கு வாலாட்டி தேசியத்தை விபச்சாரம் செய்தனர். உயர்சாதிய ஆதிக்கத்தை தக்கவைத்து, அதன் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர் புலிகள். யாழ் பிரதேசவாத நலன்களை ஆணையில் வைத்து தேசியத்தை வரைமுறை இன்றி பெண்ணின் அடிமைத்தனத்தை படுக்கையாக்கி கற்பழித்தனர்.
புலிகளின் பாசிசம் 1986க்கு பின் அதிகாரத்துக்கு ஏறத் துடித்த காலத்தில், ஈவிரக்கமற்ற பல படுகொலைகளை நடத்தினர். இதன் போது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மேலான தண்டனை, உயர்சாதி இளைஞர் மேலான தண்டனையை விட கோரமாக இருந்தது. அழித்தொழிப்பு உச்சத்தில் இருந்த 1988 இல், வடமராட்சியைச் சேர்ந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியைச் (என்.எல்.எப்.ரி) சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஒரேநாளில், வெவ்வேறு இடத்தில் வைத்து தெரிவு செய்தே வீதிகளில் சுட்டுக் கொன்றனர். அன்று தப்பியவர்களை தொடர்ந்து தேடி அழித்தனர். அப்போது வடமராட்சிக்கு புலிக்கு பொறுப்பாக இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞனையே, முதலில் அவர்களே சுட்டுக் கொன்றனர். பின்பே இந்த அழித்தொழிப்பு அரங்கேறியது. புலிகள் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலையும், முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலையும் தொடங்க முன்பு, புலிகளில் இருந்த முஸ்லிம் போராளிகளை கிழக்கில் முதலில் கொன்ற பின்பே, முஸ்லிம் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இது போல் வடமராட்சியில் தாழ்த்தப்பட்ட மாற்று இயக்க போராளிகள் மேலான தாக்குதலுக்கு முன், அதாவது 1988, 1989 இல் சொந்த இயக்கத்தில் தாழ்த்தப்பட்டோரைக் கொன்றனர். இதைத் தொடர்ந்து இக் காலத்தில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை, தெரிந்தெடுத்து துரோகியாக்கி கொன்றனர்.
குறிப்பு : கேசவன் தாக்கப்பட்டது கிட்டுவின் காதலிக்கு நக்கல் அடித்தபடியாலா? என நான் கேட்க தெரியாது என பதிலளித்தார்.
குறிப்பு : கிட்டுக்கு பல காதலிகள் இருக்கிறார்கள் என நான் கேட்க, இல்லை ஒரு காதலி தான் என பதிலளித்தார். ஆனால் இவருக்கு பல பெண்களுடன் பாலியல் தொடர்பு இருந்தது.
குறிப்பு : தெல்லிப்பளை புலி பொறுப்பாளர் மதி, ஒரு வைத்தியரின் மனைவி, மகள் இருவரும் கற்பமாக காரணம் என்று நான் கேட்க, தெரியாது என்றார்.
விளக்கம் : கிட்டு மட்டுமல்ல பல புலித்தலைவர்கள் பல பெண்களுடன், தமது பாசிச அதிகாரத்தின் மூலம் தொடர்பு வைத்திருந்தனர். இயக்கத்தில் பெண்களை சேர்க்க முன்பே, பல வைப்பாட்டிகளையே புலித் தலைவர்கள் வென்று எடுத்து இருந்தனர். அதிகாரம் மற்றும் பணத்துடன் மிதந்த புலிகளின் தலைவர்மார்களில் சிலர், பெண்கள் பலரை தமது வைப்பாட்டியாக வைத்திருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை பயன்படுத்தி, ஆணின் அதிகாரத்தை புலிகளின் பாசிச மிரட்டல் கட்டுப்படுத்திய நிலையில் பாலியல் ரீதியாக பெண்கள் புணரப்பட்டனர். ஆண் இதைத் தட்டிக் கேட்டால் துரோகியாக வீதியில் கொல்லப்படும் அவலம் சமூக ஒழுக்கமாகியது. அத்துடன் யாழ் பூர்சுவா ஆயுதக் கவர்ச்சி சார்ந்த பெண்களையும், உதவி மற்றும் ஆதரவு தளத்தில் வீடுகளில் உள்ள பெண்களையும் கூட பயன்படுத்தினர். ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூட, புலியின் வெவ்வேறு நபர்களுக்கு இடையில் பாலியல் உறவை திருமணத்துக்கு வெளியில் கொண்டிருந்தனர். புலிகளின் புனிதம், தூய்மைக் கோட்பாடுகள் ஆயுத முனையில் பவனி வந்த போது, ஆணாதிக்கத்தின் வக்கிரத்துடன் பெண்கள் புணரப்பட்டனர். புலிகள் புகைப்பது இல்லை என்பது அதன் புனிதமான ஒழுக்கம். ஆனால் மாத்தையா இரகசியமாக புகைப்பவர். இப்படி பல. புலிகள் திருமணம் செய்யக் கூடாது என்பது, புலிகளின் ஆரம்பகால புனிதம் சார்ந்த தேசிய ஒழுக்கம் சார்ந்த சட்டமாகும். பெண்களை இயக்கத்தில் இணைத்தல், திருமணம் செய்தால் போராட்டத்தை சிதைத்துவிடும் என்பது "மேதகு" பிரபாகரனின் தேசிய ஒழுக்க கோட்பாடு. ஆனால் அதை பிரபாகரனே பகிரங்கமாக முதலில் மீறினார். புனிதங்கள் எல்லாம் போலியானவையாக, உலகத்தை ஏமாற்ற கட்டமைக்கப்பட்டவையே. ஜெர்மனிய நாசிச ஆரியர்கள் போன்று, தூய்மைக் கோட்பாடு எல்லாம் போலியாகவும் ஏமாற்றகவும் இருந்தது. ஒழுக்கத்தின் பெயரில் ஒழுங்கீனம் என்பது பாசிச வழிகளில் மூடிமறைக்கப்பட்டு பெருகியது. வெளித் தோற்றத்தில் போலியான ஒழுக்கவாதிகளாக இருந்த அதே நேரம், உள்ளடக்கத்தில் அவர்கள் மிக மோசமான மனித விரோதிகளாக இருந்தனர். இரக்கமற்ற படுகொலைகளை தமது பண்பாக்கியதுடன், இரத்தம் தோய்ந்த கையால் ஒழுக்கம் மேல் சத்தியப் பிரகடனம் செய்தனர். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் சார்ந்து, பெண்களை நுகர்வதில் புலிகளின் ஒழுக்கம் மூடிமறைக்கப்பட்ட போதும், இவை சுற்று வட்டாரத்தில் இரகசியமான ஒரு குசுகுசுப்பாக இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.
































Geen opmerkingen:

Een reactie posten