இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பாப்பரசர் 16 வது பெனடிக்ட்டை வத்திக்கானில் வைத்து சந்தித்தார். இதன்போது இருவரும் இந்தக்கருத்தை பரிமாறிக்கொண்டதாக வத்திக்கான் பாப்பரசர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாப்பரசர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் சமூக, பொருளதார, அபிவிருத்தி, சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் இரண்டு தரப்புக்கு இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் சமய, கல்வி மற்றும் சுகாதார சமூக மேம்பாட்டுக்கு வத்திக்கானின் உதவி தொடரும் என்றும் பாப்பரசர் தரப்பு உறுதியளித்ததாக அவரின் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten