தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 juni 2012

சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 49)


குறிப்பு : 07.05.87 அன்று மதியம் விசு என்பவர் நடந்த மற்றும் கதைத்த விடையங்களை கேட்டு பதிவு (ரேப்) பண்ணினான்.


விளக்கம் : எனது விசாரணையில் ஒத்துக் கொண்டவைகளை ஒளிநாடாவில் பதிவு செய்தனர். புலிகள் நவீன சித்திரவதை முறைகளையும் உள்ளடக்கிய வகையில், காட்டுமிராண்டித்தனத்தை ஒருங்கமைத்த வகையில் அவர்களின் வதைமுகாம் வெம்பிக்கிடந்தது. கடத்திவரும் ஒவ்வொரு நபர்கள் மீதும், அடி உதை முதல் எலும்புகளை முறித்துக் கொல்வது, உயிருடன் இருக்கும் போதே உடல் பாகங்களை வெட்டி அகற்றுவது, அவர்களை நிர்வாணமாகவே படம் எடுப்பது, விசாரணையைப் பதிவு செய்வது என்று பல வடிவங்களில் வதையின் கதைகள் உறைந்து போன, எமது தமிழ் சமூகத்தில் ஆழப் பதிந்து கிடக்கின்றன.



புலிகளின் பயிற்சியின் போது, பயிற்சி பெறும் நபர்களை தனித்தனியாக்கி மற்றவர்கள் சூழ்ந்து நின்று தாக்குவது மூலம், பாசிச வக்கிரத்தை கோரமாக்குகின்றனர். பல்கலைக்கழகங்களில் ராக்கிங் என்ற பகிடிவதை போல், சித்திரவதையை பிரபாகரன் வழியில் மேல் இருந்து கீழாக அமைப்பு கட்டுபாட்டுக்குரிய ஒழுங்கில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. உயிருடன் ஆடு மாடுகளின் உடல் பாகங்களை வெட்டி அகற்றுவது, பயிற்சியில் ஒரு வக்கிரமான பாகமாகின்றது. மனப்பிழற்சியில் உயிர்வதை மகிழ்ச்சிகுரிய விடையமாக்கப்படுகின்றது. மனிதாபிமானம் கேவலமானதாக்கப்படுகின்றது. இவற்றை உருவாக்க பல வடிவங்களில் சித்திரவதைக்குரிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கரும்புலிகள் என்ற தற்கொலைப் (அதாவது புலியின் மொழியில் "தற்கொடை") படையணியின் வன்மமிக்க ஈவிரக்கமற்ற மக்கள் கூட்டம் மீதான படுகொலைக்கான பயிற்சியாக, உயிர் உள்ள மனித உடல்களை கொல்வது பயிற்சிக்காக வழங்கப்பட்டன. இந்த உயிருள்ள மனிதர்கள் புலிகளால் குத்தும் துரோக முத்திரையுடன், ஆயிரம் ஆயிரமாக கடத்தப்பட்டனர். இந்த வகையில் புலிகளின் வதைமுகாமில் சிக்கிய ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள், இந்தக் கரும்புலிகளின் பயிற்சிக்குரிய பொருளாகி, உடல் சிதைக்கப்பட்டு மாண்டு போனார்கள். பிரபாகரனிடம் பி.பி.சி எடுத்த பேட்டி ஒன்றின் போது, கரும்புலிக்கான பயிற்சி என்ன என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அதைப்பற்றி கூற முடியாது என்ற கூறிய பிரபாகரன், ஒரு குரூரமான வக்கிரமான சிரிப்பு ஒன்றை ரசித்தபடி உமிழ்ந்ததை நாம் மறந்துவிட முடியாது.


குறிப்பு : மாஸ்டரும், விசுவும் சபேசன் வீட்டில் எவ்வளவு பணம் உள்ளது எனக் கேட்டனர். (வசந்தன் 80000 ரூபாய் காசு சபேசன் அக்காவிடம் வாங்கியது ஏன் என்றார். இதையும் வசந்தன் புலிகளிடம் கூறிவிட்டார்.)

விளக்கம் : பணத்தை யாரிடம் இருந்து பெற்றுத் தந்தது என்பதையும், எங்கு வைத்து பணம் தந்தது என்ற விடையத்தையும் கூட வசந்தன் கூறியிருந்தார். கடத்தல் மற்றும் கைதுகள் தொடரும் அபாயத்தை இது விட்டுச் சென்றது. சிறு தவறுகள் கூட ஆபத்தான நிலைக்கும், புதிய உயிர்களையும் கூட பழிவாங்கக் கூடியனவாக இருந்தது. பாசிசம் தலைவிரித்தாடும் போது, உதிரிச் சம்வங்கள் கூட பாரிய உயிர் இழப்புகள் முதல் ஒட்டுமொத்த புரட்சிகர பணியையே அழிக்கவல்ல நிகழ்வாகிவிடுகின்றது. உண்மையில் சபேசனின் அக்கா எமது அமைப்புக்கு உதவி செய்யும் ஆதரவுக் குடும்பமே. தம்பியின் தொடர்பில் இருந்து நாங்கள், அவர்கள் வீட்டை உரிமையுடன் எமது அரசியல் வாழ்வில் பயன்படுத்தினோம். நான் இந்த இடத்தில் இதை நீடிக்கவிடாது தடுக்கும் வகையில், பணத்தை பாதுகாப்பாக வைக்க அவர்களிடம் கொடுத்தேன் என்றேன். யார் பணத்தை உன்னிடம் தந்தது என்று கேட்டனர். அவர்களுக்கு நன்றாக தெரிந்த நாட்டில் இல்லாத ஒருவரின் பெயரில், அவரே என்னிடம் தந்தார் என்றேன். அவர் எங்கே என்றனர். நான் தெரியாது என்றேன். அவர் தான் என்னை வந்து சந்திப்பவர். ஏனெனில் நான் பகிரங்கமான பிரச்சார உறுப்பினர் என்றேன்.

குறிப்பு : மாத்தையாவிடம் வீட்டுக்கு போகப்போகிறேன் எனக் கேட்க, மாணவருக்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். கெதியில் விடுகிறோம் என்றான்.

குறிப்பு : விசுவிடம் ஒரு கட்டத்தில் என்னைச் சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றான்.

விளக்கம் : அவர்கள் என்னைத் தொடர்ந்து என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாக இருந்தது. இதை தெரிந்து கொள்ள, அவர்களிடம் என்னைச் சுடும்படி கோரினேன். அதேநேரம் இதற்கு நேர் எதிராக வீட்டுக்கு விடும்படியும் அடிக்கடி கோரினேன். எந்தச் சட்டமும் நீதியுமற்ற அராஜகத்தை அடிப்படையாக கொண்ட பாசிசத்தை அரசியலாக கொண்ட வதைமுகாமில், அவர்களிடம் எனது விடுதலையை கோருவது எனது அடிப்படை உரிமையாக இருந்தது. இதன் மூலம் அவர்களின் உண்மை நோக்கத்தை பரீட்சிக்கவும் முயன்றேன். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, என் பற்றிய இறுதி முடிவுக்காக அவர்கள் காத்து இருப்பதை நான் ஊகித்துக் கொண்டேன். அது என்ன என்பதை மட்டும் இன்றுவரை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் தப்பிய பின்பு, எம்மில் இருந்து பிரிந்த தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி) அன்ரனை, கைது செய்ய முயன்றது தெரியவந்தது.

குறிப்பு : 07.05.87 மாத்தையா வந்தார். நான் அவரிடம் வர்க்கப் போராட்டத்தை தேசியத்தில் இணைக்கவில்லை தானே எனக் கேட்க, அவர் ஆம் என்றார்.

குறிப்பு : உங்களுடைய போராட்டம் மேல் மட்டத்தை சார்ந்த உயர் வர்க்கம் சார்ந்தது தானே எனக் கேட்க, ஆம் என்றார். நீங்கள் யாழ் கிராமங்கள் (இங்கு கிராமம் எனக் கூறியது தாழ்த்தப்பட்ட கிராமங்களை) அனைத்திலும் அன்னியப்பட்டுத்தானே இருக்கிறீர்கள் எனக் கேட்க, ஆம் என்றார்.

விளக்கம் : சகல தாழ்த்தப்பட்ட கிராமங்களும், புலிகளுக்கு எதிராக இருந்தது. உயர்சாதி கண்ணோட்டம் கொண்ட புலிகள் இயக்கம், மற்றைய இயக்கங்களை சாதி ரீதியாக அடையாளம் காட்டி தூற்றியே தம்மை வளர்த்தனர். உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முந்தைய பழைய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில், கிட்டு ஒரு சாதி வெறியனாக இருந்ததால் இயக்கத்தை விட்டே வெளியேற்றப்பட்டவன். கிட்டு தனது உடுப்புகள் அனைத்தையும், சாதி குறைந்த புலி உறுப்பினர்களைக் கொண்டு சுத்தப்படுத்தியதால் (தோய்த்ததால்), இயக்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அப்போது அந்த இயக்கத்துக்கு பிரபாகரன் தலைவர் அல்ல. மக்கள் விரோத அரசியல் காரணத்துக்காக தமிழ் புலிகள் உடைந்த போது, பிரபாகரனின் தலைமை உருவானதுடன் சாதி வெறியன் கிட்டு மீண்டும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டான். சாதி வெறியர்களின் இயக்கமாக பிரபாகரனின் தலைமையில் பாசிச இயக்கமாக தன்னை தூய்மைப்படுத்திய போது, சாதிவெறியன் கிட்டு மீண்டும் புலியில் இணைக்கப்பட்டான். இந்த இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே மீண்டும் எழுந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதி தமிழருக்கு சேவை செய்வதே, தேசியக் கடமை என்பது புலிகளின் பாசிச தேசிய கொள்கையாகும். இதை யாரும் எவரும் என்றும் மறுக்க முடியாது.

உழைப்பை கேவலமாக கருதிய புலிகள், யாழ் மேட்டுக்குடி கலாச்சாரத்தில் அதன் நுகர்வில் தம்மை கவுரவப்படுத்தியவர்கள். சீசும் (பால் கட்டி), கோக்கோகோலாவுமாகவே புலிகளின் ஆரம்ப வரலாறு தொடங்கியது. மேற்குநாட்டு பவுசுடன் கூடிய கவர்ச்சியைக் காட்டி, யாழ் மேட்டுக்குடியின் பூர்சுவா கனவுடன் இணங்கிப் போனதுடன், உழைக்கும் கிராமிய மக்களை இழிவாக கேவலமாக காட்டி இயக்கத்தை உருவாக்கினர். உழைப்பை கேவலமாக கருதினர். உழைக்கும் மக்களின் வாழ்வுடன் அதன் துன்பம் துயரங்களுடன் இணைந்து போராடாத இயக்கம், கவர்ச்சிகரமான விளம்பர பாணியில் இளையோர்களை சுண்டி இழுத்து கவர்ந்து சென்றனர். அவர்களை வக்கிரமாக்கி, மக்களை கேவலமாக பார்க்க தூண்டினர். அது நீடித்த வரை அதைக் கொள்கையாக்கி, ஒரு பாசிச இயக்கமாக நீடித்தது.

மக்களிடம் அன்னியமான புலிகள் இயக்கம், மிரட்டல் மூலமும், உண்மைகளை மூடிமறைத்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. துரோகி என்ற வார்த்தை மூலம் அனைத்து மனித விரோத பாசிச நடத்தைகளையும் ஈவிரக்கமின்றி செய்தனர். பூர்சுவா வாழ்வியலுடன் இணைந்து போன மேட்டுக்குடி கலாச்சார சமூகத்தில், புலிகளின் பாசிசம் மக்களை மந்தைக் கூட்டமாக தலையாட்ட வைத்தது. புலிப் பினாமிகள் தமிழ் மீடியாவை கைப்பற்றி, பாசிசத்துக்கு அரோகரா போடுவது எப்படி என்பதில் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் அதீதமான பக்தியை உருவாக்கி, அதைக்கொண்டு நக்கிப் பிழைத்தனர்.
49.சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 49)

48.யாழ் பல்கலைக்கழக போராட்ட கோசத்தைக் கூறக் கோரி தாக்கினர்-(வதைமுகாமில் நான் : பாகம் - 48)

47.புலிகள் ஒரு மனிதனை அயன்(ஸ்திரிப்பெட்டியால் சுட்டு சூடு வைத்து) பண்ணிக் கொன்ற நிகழ்வு பற்றி - (வதைமுகாமில் நான் : பாகம் - 47)

46. விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 46)

45.நீங்களெல்லாம் ஐந்தாம் படை என்று குற்றம்சாட்டிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 45)

44.கிட்டுவை படுகொலை செய்ய முயன்றவர்கள், அதை நான் செய்ததாக கூறினர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 44)

43.புதியபாதை குமணன், ராகவன் பற்றி இரண்டாவது வதையின் இறுதியில் மாத்தையா - (வதைமுகாமில் நான் : பாகம் - 43)

42.எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

41.ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த முடியாது - (வதைமுகாமில் நான் : பாகம் - 41)

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)

32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)

31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)

30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)

29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)
10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)

Geen opmerkingen:

Een reactie posten