சுலோக அட்டைகளினில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக் - கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர், சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டினில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள், முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தியுள்ளனராம்.
மலர்வளையத்தை சூழ தாம் எடுத்து வந்த சுலோக அட்டைகளினை பரப்பி வைத்த அவர்கள், பின்னர் அரசியல் யாப்பின் பிரதிகளையும் அங்கு வைத்து தீயிலிட்டனர். மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியினில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2779
Geen opmerkingen:
Een reactie posten