தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juni 2012

அகதிகளுக்கான புதிய சட்டமூலம் தமிழ் மக்களை கடுமையாக பாதிக்கும்! – ராதிகா சிற்சபைஈசன் !



கனடிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அகதிகளுக்கான புதிய சட்ட மூலம் ஆபத்தான பல் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஸ்கார்பரோ வாசிகள் இந்த சட்ட மூலத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என என்.டி.பி கட்சியைச் சேர்ந்த ஸ்கார்பரோ - றூஜ்ரீவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கூறியுள்ளார்.
கொன்சவேற்றிவ் அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள அகதிகளுக்கான சட்ட மூலம் C-31 அகதி மக்கள் நிரந்தர குடிமக்களாவதை தடுக்கும் வகையிலும், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ முடியாத அளவிற்கு நியாயமற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபைசன் விளக்கமளித்துள்ளார்.
பாராளுமன்ற பொது அவையின் இறுதி மேற்பார்வையில் தற்போது உள்ள இந்த சட்டமூலத்தில் உலகில் பாதுகாப்பான நாடுகள் எவை என்பதை குடிவரவு அமைச்சர் ஜோசன் கென்னி தானாகவே முடிவு செய்யும் நிலையில் உள்ளது என்பதையும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கென்னி பாதுகாப்பான நாடாக கருதுபவைகளில் இருந்து வந்து அகதி உரிமை கோருபவர்களின் மனுக்கள் இனி பரிசீலிக்கப்படாது. அவர்கள் தங்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவர் எனவும் கூறியுள்ளார்.
சட்டமூலம் C-31 குறித்து வெளிப்படையான மறுப்பு விமர்சனங்களை தெரிவிப்பதற்காக தன் தொகுதியான றூஜ்ரீவரில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
ஹங்கேரியை பாதுகாப்பான நாடாக அறிவித்துள்ளதன் மூலமாக ரோம அகதிகளை மீண்டும் அவர்கள் நாட்டிற்கே அனுப்ப கனடிய குடிவரவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் மீண்டும் ஹங்கேரி அனுப்பப்பட்டால் தாங்கள் பலவித துன்புறுத்தல்களையும், வன்முறைகளையுமே சந்திக்க நேரிடும் என ஸ்கார்போரோ மேற்கு ஹில் பகுதியில் வசிக்கும் பல அகதிகள் அஞ்சுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் சுட்டிக்காட்டினார்.
அதே போன்று இன்னமும் தங்கள் நிலை என்ன என்பது முடிவாகாமல் இருக்கும் எம்.வீ.சன் சீ மற்றும் ஓசன் லேடி கப்பல்களில் வந்த தமிழர்கள் பலர் ஸ்கார்போரோவிலேயே வசித்து வருவதையும், அவர்கள் அனைவருமே தாங்களும் மீண்டும் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தற்போது உறைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் இது போன்ற அடக்குமுறைகளுக்குப் பயந்து தற்போது அகதிகள் வெளியே வரவும் தங்கள் கதைகளை சுதந்திரமாக சொல்லவும் கூட பயப்படுகின்றனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட தங்கள் முகங்களைக் காட்ட விரும்பாததால் அகதிகள் வர மறுத்து விட்டனர் எனவும் பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளார் ராதிகா.

Geen opmerkingen:

Een reactie posten