இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பல்லின மக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அவுஸ்திரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதன கட்டிடங்களில் முக்கியமானதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டிடமாகும்.
கொடியேற்றலின் பின்பு, தமிழீழத் தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி டொமினிக் சந்தியாப்பிள்ளை, பல்லின மக்களின் பெருகிவரும் ஆதரவு தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது.
இதனைப் பார்வையிட்ட தொழிற் சங்க உறுப்பினர்கள் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்ததுடன், இலங்கை அரசின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten