தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juni 2012

யாழ்.நகரில் அமைச்சர் கோரியும் சிங்கக் கொடியை ஏற்ற மறுத்த அப்பாத்துரை விநாயகமூத்தி பா.உ !



யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி 'நான் ஏற்றமாட்டேன்' என கூறி மறுத்துள்ளார்.
அத்துடன் "ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது
இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோரினார்.
அப்போது, கொடியை ஏற்ற மறுத்ததுடன் 'நான் ஏற்ற மாட்டேன். ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten