எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் அரசகரும மொழி என்ற சட்டத்தைத் தொடர்ந்து, தமிழர்கள் தமது உரிமைக்காக போரட ஆரம்பித்தார்கள்.
ஆட்சியாளர்கள் மாறினாலும் ஆட்சிகள் மாறினாலும் அன்று தொட்டு இன்றுவரை தமிழர்கள் பல்வேறு வகையில் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர்.
சிங்களம் மட்டும் அரசகரும மொழி என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதையடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில், காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை, சிங்கள அரசு வன்முறைக்குழுக்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில், பலர் உடல், மன ரீதியான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் 150இற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வழிகோலிய முக்கிய காரணமாகும்.
இதனையடுத்து, தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன.
1. கல்லோயா படுகொலைச் சம்பவம்- 1956ஆம் ஆண்டு ஜுன் 11 ஆரம்பித்து தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2. 1958 ஆம் ஆண்டு தமிழ்- சிங்கள மக்களிடையெ இனக்கலவரம்: இக்கரவரத்திலும் தமிழர்கள் பல சித்திரவதைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டனர்.
3. 1977ஆம் ஆண்டு மற்றுமொரு பாரிய இனப்படுகொலைச் சம்பவம் தமிழர்களுக்கெதிராக அரங்கேறியது.
4. 1983ஆம் ஆண்டு யாழ்.திருநெல்வேலிப் படுகொலைச் சம்பவம்: ஜுலை மாதம் 24, 25 ஆம் திகதிகளில் படையினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைச் சம்பவமாகும்.
5. 1983 கறுப்பு ஜுலை: இவ்வினக்கலவரத்தில் தமிழர்கள் தமது உடமைகளை இழந்ததோடு நிர்வாணமாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் 3000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் உச்சகட்ட நிகழ்வே கொழும்பு வெலிக்கடைசி சிறை்சசாலைப் படுகொலைகளாகும்.
6. 1985ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி நெடுந்தீவு குமுதினிப் படகுப் படுகொலைச் சம்பவம்: படகில் பயணித்த 33 தமிழர்கள் கடற்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
7. 1986ஆம்ஆண்டு பெப்ரவரி 19ஆம் ஆண்டு- அம்பாறை உடும்பன்குளம் படுகொலை
8. 1990ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கிழக்கு மாகாணம் வீரமுனைப் படுகொலை
ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்பும் போராட்டம் நடந்த காலத்திலும் போராட்டம் நிறைவடைந்த காலத்திலும் இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள்.
இதனையடுத்து, 2009ஆம் ஆண்டு காலப்பகுதியே தமிழர்களுக்கு எதிரான தாக்குதலின் உச்சகட்டமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten