மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயக அரசாங்கம் என்றால் 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 2014 ஆம் ஆண்டில் அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் ஒன்றை பெற்று தீர்மானத்தை எடுக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
17வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தி நாட்டில் சுயாதீன பொலிஸ், சுயாதீன அரச சேவை, சுயாதீன நீதிச்சேவை ஆகிய ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் சட்டமூல யோசனையையும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும்.
இந்த அரசாங்கம் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்றால் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்க வேண்டும்.
மகிந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம். இந்த அரசாங்கம் மக்களின் வாக்குரிமைகளை கொள்ளையிட்டுள்ளது. தேர்தல்களை நடத்துவதால் மட்டும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு விடாது.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி செயற்பாட்டில் இருக்க வேண்டும். அரசாங்கம் அங்காங்கே தேர்தலை நடத்துகிறது. இது சுதந்திரமான நீதியான தேர்தல் அல்ல. தேர்தல் நடத்துவதால் மாத்திரமே அது ஜனநாயகத்தின் அடையாளமாகிவிடாது.
சிம்பாப்வே நாட்டிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. எனினும் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமாக இருக்கவேண்டும்.
நீதிமன்றத்தில் தற்போது சுயாதீன தன்மையில்லை. நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊடக சுதந்திரம், நல்லாட்சி என்பனவும் வீழ்ச்சியடைந்துள்ளன என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTaMWjp2.html#sthash.zayjaQpA.dpuf17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 2014 ஆம் ஆண்டில் அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் ஒன்றை பெற்று தீர்மானத்தை எடுக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
17வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தி நாட்டில் சுயாதீன பொலிஸ், சுயாதீன அரச சேவை, சுயாதீன நீதிச்சேவை ஆகிய ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் சட்டமூல யோசனையையும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும்.
இந்த அரசாங்கம் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்றால் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்க வேண்டும்.
மகிந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம். இந்த அரசாங்கம் மக்களின் வாக்குரிமைகளை கொள்ளையிட்டுள்ளது. தேர்தல்களை நடத்துவதால் மட்டும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு விடாது.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி செயற்பாட்டில் இருக்க வேண்டும். அரசாங்கம் அங்காங்கே தேர்தலை நடத்துகிறது. இது சுதந்திரமான நீதியான தேர்தல் அல்ல. தேர்தல் நடத்துவதால் மாத்திரமே அது ஜனநாயகத்தின் அடையாளமாகிவிடாது.
சிம்பாப்வே நாட்டிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. எனினும் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமாக இருக்கவேண்டும்.
நீதிமன்றத்தில் தற்போது சுயாதீன தன்மையில்லை. நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊடக சுதந்திரம், நல்லாட்சி என்பனவும் வீழ்ச்சியடைந்துள்ளன என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten