சிங்களம் திட்டமிட்டு பரப்பிய உளவியல் போருக்குள் தன்னை பலிகொடுத்து தன்னை பாதுகாக்கும் ஒரு சிறுபிள்ளைதனத்தை அம்மையார் செய்திருக்கிறார். மெர்வின் சில்வாவின் “கல்யாண கதையும்” சிங்கள இனவாத அமைப்புக்களின் போராட்டங்களும் தன்னை திசைதிருப்ப சிங்களத்தால் திட்டமிடப்பட்டவை என்பதை நவிபிள்ளை உணராதது துரதிஸ்டவசமானது.
விளைவாக தனது பதவிநிலையையும் வந்த நோக்கத்தையும் மறந்து தனி மனுசியாக தன்னை புனிதப்படுத்த புலிகள் மீதும் தமிழர் தரப்பு மீதும் சேற்றை வாரியிருக்கிறார்.
சிறீலங்கா அரசு மீது குற்றங்களை வைக்க சொற்களை தேடி அகராதிகளின் துணையை நாடிய அவர் புலிகள் மீதான குற்றத்திற்கு அகராதிக்கு வெளியில் இருந்து சொற்களை கொண்டு வந்திருக்கிறார்.
எந்த விசாரணையும் இல்லாமல் சிறீலங்கா அரசால் பரப்புரை செய்யப்பட்ட கொலைகளை புலிகளின் கொலைகளாக அவர் சித்திரிப்பது அவர் பதவி நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.
நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் படுகொலைகளை புலிகள் செய்ததாக அடித்து கூறும் இவர் இதற்கான தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.
நீலனின் கொலையை புலிகள் ஒப்புக்கொண்டார்களா? அல்லது புலிகளின் தலைவர்கள் இக்கொலை தொடர்பாக நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள
ஆனால் முடிந்த முடிவாக புலிகள் நீலன் திருச்செல்வத்தை கொலை செய்ததாக சொல்கிறார். நவிபிள்ளை முடிந்தால் தமிழர் தரப்பிற்கு இந்த ஆதாரங்களை தர வேண்டும்.
ராஜீவ்காந்தி தொடக்கம் பிரேமதாச வரை புலிகள் எப்படி அன்னிய சதிகளினூடதாக அரசியற் படுகொலைகளில் சம்பந்தபடுத்தப்பட்டார்கள் என்பது தற்போது நிருபணமாகிவருகிறது. இதற்காக புலிகள் அமைப்பிலிருந்தே பலர் விலைக்கு வாங்கப்பட்டதும் நிருபணமாயிருக்கிறது. இன்று இன அழிப்பு அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கும் குமரன் பத்மநாதன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
Kallvan Abidjan
Geen opmerkingen:
Een reactie posten