இந்தியாவில் இருந்து ஒரு மாத சுற்றுலா விசா அனுமதியில் இலங்கை வரும் இந்தியர்கள், வட பகுதியில் புலனாய்வு தகவல்களை திரட்டுவதாக இராணுவம் தெரிவித்தது.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் இருந்து ஒரு மாத விசா அனுமதியில் வரும் சிலர் சேலைகள் உட்பட பல பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வது போல், புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் இந்த நபர்கள் விசா காலம் முடிந்தும் வடக்கில் தங்கியிருக்கின்றனர்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் ஓமந்தை ஊடாக வடபகுதிக்கு செல்கின்றனர். இவர்களில் வெளிநாட்டு குழுக்கள், வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்ளனர். வடக்கு பகுதிக்கு செல்லும் நபர்களில் அரசாங்கத்திற்கு எதிரானவர்களும் இருக்கக் கூடும்.
இதனால் எத்தனை வெளிநாட்டவர்கள் வடபகுதிக்கு சென்றனர். எத்தனை பேர் மீண்டும் திரும்புகின்றனர் என்பதை அறியும் தேவை இருக்கின்றது. அதேவேளை இந்தியாவில் இருந்து பெண்களை கவரும் சோலைகள் உட்பட பல பொருட்களை விற்பனை செய்வதற்காக பலர் வடக்குக்கும், கிழக்கிற்கும் வந்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா விசா பெற்று இலங்கை வந்துள்ளனர். இந்த விசாவில் வந்தவர்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் வர்த்தக விசாவில் வரவேண்டும்.
இவர்கள் அனுமதி காலத்தையும் தாண்டி, இங்கு தங்கியுள்ளனர். இதனால் இவர்கள் புலனாய்வாளர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இப்படியான தந்திரமான புலனாய்வாளர்கள், அரசாங்கத்திற்கு எதிராக வேலை செயற்படுபவர்களை அறிந்துக் கொள்வதற்காக கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பரீட்சிக்க வேண்டிய தேவையுள்ளது என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmt6.html#sthash.uhjwjyjw.dpufஅவர் மேலும் தெரிவிக்கையில்,

Geen opmerkingen:
Een reactie posten