தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

சவுதியில் மரணமான இலங்கைத் தமிழ் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் பெற்றோர் சந்தேகம்!

சவுதி அரேபியா, ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தமிழ் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வழங்க்கப்பட்டு சடலம் நேற்று கொழும்பில் இருந்து சொந்த இடம் கொண்டுவரப்பட்டு இன்று அதனை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.
இவர் கடந்த 4 வருடங்களாக சவுதி அரேபிய நாட்டில் ஜித்தா நகரில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில்,
தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவுதியரேபியா சென்றார். அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை.
எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன் எதுவும கிடைக்கவில்லை. இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது.
இந் நிலையில் சவுதி நாடு சென்றது தொடக்கம் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும்.
காரணம் என்னிடம் சடலத்தை தரும்போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளாதாகவே சவுதியில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர் என்று கூறினர்.
ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப் பகுதி, மார்புப் பகுதி, கழுத்து பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளில் காயத் தழும்புகளும் அடிகாயங்களும் காணப்படுகின்றன.
எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை பணிக்க வேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்.
இவ்விடயத்தை கேள்வியுற்ற ஊர் மக்கள் உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் இச்சம்பவம் பற்றி கூறியிருந்தனர்.
வெருகல் சித்திரவோயுதர் ஆலய இறுவெட்டு வெளியீட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பவத்தை கேள்வியுள்ளதும் அங்கிருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக சென்று வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இவ்விடயமாக ஆராயுமாறு வேண்டுதல் விடுத்தார்.
அத்தோடு உறவினர்களின் வாக்கு மூலத்தையும் பொலிஸார் பதிவு செய்தனர். அத்தோடு சடலத்தை அடக்கம் செய்யுமாறும், இவ்விடயமாக தாங்கள் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியுரை வழங்கியுள்ளார்.
பின்னர் ஓமடியாமடு கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சவூதியில் இருந்து அனுப்பப்பட்ட சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், உறவுகளுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
இவ்வியடமாக தான் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும்இ இது சார்பான தீவிர விசாரணைக்கான ஏற்பாடும், நஸ்ட ஈடும் கோருவதாகவும்இ அடித்து துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் உரியவருக்கு தகுந்த தண்டனை வழங்க கோருவதாகவும் உறவுகளுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாக இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் சடலமாக அனுப்பப்படும் நிலை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmu7.html#sthash.p8bE8MSD.dpuf

Geen opmerkingen:

Een reactie posten