ஜெனீவா ஐ.நா முன்றலில் நேற்றைய தினம் அதிகாலை தீ குளித்தவர் அடையாளம் காணப்பட்டார் ! அவர் பெயர் ரட்ணசிங்கம் செந்தில் குமரன் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதுதொடர்பாக சுவிசில் இருந்து கிடைத்திருக்கும் மேலதிகத் தகவல் !
ஜெனிவா முன்றலுக்கு அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கியுள்ளார்கள். . ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பனிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான் !
கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான். பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கினார்கள்.
இவர் அருகே உள்ள அந்தப் படம் யாருடையதாக இருக்கும் ? சாட்சாத் எமது தேசியதலைவரது படமே ! இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது. இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை !இதேவேளை ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்!
காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!
நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!!
ஜெனீவாவில் தீ குளித்தவர் இறந்துபோனார்: தமிழரா என்பதில் சந்தேகம்: [4ம் இணைப்பு]
06 September, 2013 by admin
இதேவேளை இறந்தவர் திபெத்தியராக இருக்கலாம் என்றும் அதனால் தான் அவர் தலேலாமா என்ற "தா" சொல்லை பாவிக்க முற்பட்டாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் அவர் அருகே இருந்த துண்டுப் பிரசுரங்களில் புலிகள் தொடர்பான மற்றும் திபெத் தொடர்பான புகைப்படங்கள் காணப்படுகிறது என்பது பொலிசாரால் உறுதிசெய்யப்படுகிறது. இதனால் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. முன்னர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் தீ குளித்தார்கள் என்பதனை உதரணமாக வைத்தே, இதுவும் தமிழராக இருக்கலாம் என்று பொலிசார் முதலில் சந்தேகப்பட்டார்கள். அவர் அருகே காணப்பட்ட துண்டுப் பிரசுரமும் சந்தேகங்களைக் கிளப்பியது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக மேலதிக விபரங்கள் வெளியாகும். எனவே அதுவரை அதிர்வின் செய்தியோடு இணைந்திருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten