தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய அமரிக்காவின் உதவி கேட்டு ஏமாந்ததை ஒப்புக்கொண்ட நம்மவர்!

இலங்கைத் தமிழரை கைவிட்ட அமெரிக்கா, சிரியா பிரச்சினையில் தலையிடுவது ஏன்?

[ ஞாயிற்றுக்கிழமை, 01 செப்ரெம்பர் 2013, 10:26.23 AM GMT ]
உலக நாடுகளில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அந்த நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அத்துமீறி தலையிடுவதாக சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டில் ஈராக்கில் அதிபராக இருந்த சதாம் உசேன், இரசாயன குண்டு எனப்படும் விஷ குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாகவும், தனது நாட்டு மக்களை கொன்று குவிப்பதாக கூறியும் அந்த நாட்டு மீது போர் தொடுத்தது.
பின்னர் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு முகாமிட்டு தேவையின்றி பதட்டத்தையும் அதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தாக்குதல் என்ற பெயரில் போரிட்டு வந்தது.
அப்பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை பயன்படுத்தி அங்கு சமரசம் என்ற பெயரில் நாட்டாண்மை வேலையை நடத்தி வருகிறது.
தற்போது சிரியா பிரச்சினையில் விஷகுண்டு தாக்குதலை பயன்படுத்தி ஐ.நா. சபையின் மூலம் அந்நாட்டு பிரச்சினையில் தலையிட்டு போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அமெரிக்கா சாதாரண நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்ற வலுவான குற்றச்சாட்டு உள்ளது.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் மீது இராணுவ தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவியல் குவியலாக மடிந்தனர்.
அதற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அமெரிக்கா தலையிட்டு பிரச்சினையை தீர்க்கவில்லை.
ஆனால் தற்போது அரபு நாட்டு விஷயங்களில் மட்டும் தேவையின்றி மூக்கை நுழைக்கிறது.
அதற்கு அரபு நாடுகளில் எண்ணை வளம் இருப்பதே காரணமாக கருதப்படுகிறது.
அங்குள்ள எண்ணை வளத்தை சுரண்டவே அந்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இலங்கையில் அமெரிக்காவுக்கு தேவைப்படும் வளம் எதுவும் குறிப்பிடும்படி இல்லாததே ஈழ தமிழர் பிரச்சினையில் அது தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmuy.html#sthash.QjR04WmH.dpuf

Geen opmerkingen:

Een reactie posten