உண்மைகள் உறங்குவதில்லை
சர்ச்சையில் இருக்கும் கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கே சொந்தமாக இருந்து என்பதற்கான ஆவணங்கள், மன்னர் சண்முகராஜேசுவர சேதுபதியின் மகன் வழி பேரன் குமரன் சேதுபதி என்பவரால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற புதிய அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பான கச்சத்தீவானது, ராமேசுவரத்தில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
1974ஆம் ஆண்டில் இத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. தற்போது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை வலுப்பெற்றுள்ள நிலையில் கச்சத்தீவை மீண்டும் இந்தியா மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கச்சத்தீவானது இலங்கைக்கு சொந்தமானது. அது இலங்கை எல்லைப் பகுதியில் இருப்பதாக' கூறப்பட்டது.
ஆனால், கச்சத்தீவு காலம் காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கே சொந்தமானதாக இருந்தது என்பதற்கான ஆவணங்களை சேதுபதி மன்னரின் வம்சாவழியை சேர்ந்த குமரன் சேதுபதி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு கடலில் சங்கு எடுக்கவும், அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக்கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர்.
அந்த குத்தகை ஆவணங்கள் தற்போது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த கச்சத்தீவு மற்றும் கடல்பகுதியை பயன்படுத்திக்கொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் 1880ஆம் ஆண்டு ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி பிள்ளை, அப்துல்காதர் மரைக்காயர் ஆகியோருக்கு ரூ.700க்கு 5 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த ஆவணமும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர 1914ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை பாம்பனைச் சேர்ந்த முகமது மீரா சாஹிபு மரைக்காயருக்கு ராமநாதபுர சமஸ்தான திவான் சுப்பையா நாயுடு குத்தகைக்கு விட்டுள்ளார். இந்த குத்தகை ஒப்பந்த ஆவண நகல்களையும் ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேசுவர சேதுபதியின் மகன் வழி பேரன் குமரன் சேதுபதி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இனி என்ன நடக்கப்போகிறது ? சூடு பிடித்துள்ள இந்த வழக்கால் மத்திய அரசு மண்டையை பிய்த்துக்கொள்ளும் நிலை தோன்றும் என்பதில் சந்தேகம் இல்லை!

Geen opmerkingen:
Een reactie posten