தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 september 2013

கச்சத்தீவு விவகாரம்: ராஜ்சபாவில் பரபரப்பு விவாதம்!



இலங்கை அரசாங்கத்திடமிருந்துது, கச்சத்தீவை மீண்டும்  கோரமுடியாது என இந்திய மத்திய அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்கு எதிராக இன்று ராஜ்சபாவில் இயல்பற்ற நிலை ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் அண்ணா திமுக, திமுக, சிபிஐ மற்றும் பாரதீய ஜனதாக்கட்சி என்பன ராஜ்சபாவில் கேள்வி எழுப்பின.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மீனவர்களை நடத்தவேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் இதன்போது உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது உரையாற்றிய அண்ணா திமுகவின் உறுப்பினர் வி.மைத்திரேயன், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும் என்பதை வலியுறுத்தி, தமிழக அரசாங்கம் மீண்டும் நீதிமன்றத்தில் சத்தியகடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்று மத்திய அரசாங்கம் கூறியமை முழு தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் மைத்திரேயன் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் எதிரியாக காங்கிரஸ் கட்சி செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
சிபிஐ சார்பில் பேசிய டி.ராஜா, கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்தார்.
கனிமொழி பேசும் போது, கச்சத்தீவு ராமநாதபுரம் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
பாரதீய ஜனதாக்கடசியின் வெங்கையா நாயுடு இந்த பிரச்சினையை தீர்க்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTWMWlry.html#sthash.9Hb6PML7.dpuf

Geen opmerkingen:

Een reactie posten