தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 september 2013

அடப்பாவி அவுஸ்திரேலியாவுமா ?




தரையடியே செல்லும் தொலைத்தொடர்பு கேபிள்களை ‘டப்’ பண்ணி ஆஸ்திரேலிய உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற அதிர வைக்கும் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், பொதுமக்களின் தகவல் தொடர்புகளை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற ரகசியத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டபின், பிரிட்டிஷ் உளவுத்துறை தம் பங்குக்கு உளவு பார்த்த விவகாரம் வெளியாகியது.தற்போது ஆஸ்திரேலிய உளவுத்துறையும் பொதுமக்களின் தகவல் தொடர்புகளை உளவு பார்த்த விவகாரம் அம்பலமாகி அதிர வைத்துள்ளது.

ஒரு விதத்தில் பார்த்தால், எட்வார்ட் ஸ்னோடன் வெளியிட்ட ரகசியத்தின் தொடர்ச்சிதாகவே இந்த விவகாரமும் அம்பலமாகியிருக்கிறது.பிரிட்டிஷ் உளவுத்துறை, பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் இருந்து SEA-ME-WE-3 என்ற கேபிள் மூலம் நடைபெறும் தகவல் தொடர்புகளை உளவு பார்க்கும் விஷயத்தை அவர் வெளியிட்டிருந்தார்.இந்த SEA-ME-WE-3 என்பது, தரையடியே மற்றும் கடலடியே செல்லும் கேபிள்கள். இவற்றின் ஊடாகவே இன்டர் நெட் மற்றும் தகவல் தொடர்புகள் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆசியாவையும், மத்திய கிழக்கு நாடுகளையும், ஐரோப்பா வரை செல்கின்றன.இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஆஸ்திரேலிய தொலை தொடர்புகளின் (போன், மற்றும் இன்டர்நெட்) மிகப்பெரிய சதவீதம், இந்த கேபிள்கள் மூலமாகவே நடக்கின்றன.

இந்த கேபிள்கள் ரூட் செய்யப்பட்டுள்ள பாதை, ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான், அங்கிருந்து சிங்கப்பூர், டிஜிபோதி, சூயஸ் கால்வாய், கிப்ரால்டர் கடல்பகுதி ஊடாக கடல் அடியில் சென்று, ஐரோப்பாவுக்குள் ஜெர்மனியின் வட பகுதி ஊடாக செல்கிறது. அங்கிருந்து ஐரோப்பிய நெட்வெர்க் ஆரம்பித்து, அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் கவர் செய்கிறது.ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பானுக்கு ஒரு லிங்கும், சிங்கப்பூருக்கு மற்றொரு லிங்க்கும் உள்ளன. இதில் ஜப்பானிய லிங்க், உளவு பார்த்தல் விஷயத்தில் அவ்வளவாக முக்கியமற்றது. ஆனால், சிங்கப்பூர் லிங்க் உளவு பார்த்தலுக்கு முக்கியமானது.

காரணம், தீவிரவாத தொலைத்தொடர்புகள் உள்ளதாக கருதப்படும் மலேசியா, இந்தோனேசியா, அரபு நாடுகளை, ஐரோப்பாவுடன் இணைக்கும் லிங்க் இதுதான்.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து கடலடியே செல்லும் இந்த SEA-ME-WE-3 கேபிள்கள், சிங்கப்பூரின் மேற்குப் பகுதி கடல் ஊடாக தரைக்குள் செல்கிறது. ஆஸ்திரேலியாவின் சிக்னல் இன்டெலிஜென்ஸ் உளவுத்துறை (Australian Signals Directorate), சிங்கப்பூரின் உளவுத்துறையுடன் இணைந்து இந்த உளவு பார்த்தலில் ஈடுபடுவதை, ஃபோர்பாக்ஸ் மீடியா ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய உளவுத்துறைக்கு கைகொடுப்பது, சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான SingTel தொலைத்தொடர்பு நிறுவனம், மற்றும், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சின் SIGINT மையம்.

இதற்குமுன் சிங்கப்பூர் அரசின் SingTel தொலைத்தொடர்பு நிறுவனம், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Optus-ஐ வாங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியதன் பின் ஏற்பட்ட நெருக்கம் இது என்கிறார்கள்.நாம் குறிப்பிட்ட SEA-ME-WE-3 கேபிள்கள், தரையடியேயும், கடலடியேயுமாக 39,000 கி.மீ. தொலைவுக்கு கவரேஜ் கொடுக்கிறது. ஆஸ்திரேலிய, ஆசிய, மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது சேவைகளை இந்த கேபிள் நெட்வெர்க் ஊடாகவே நடத்துகின்றன.இந்த கேபிளில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்தியே, ஆஸ்திரேலிய உளவுத்துறை தகவல்களை பெற்று வந்தது எனவும், அதற்கு சிங்கப்பூர் உளவுத்துறை, பிரிட்டிஷ், மற்றும் அமெரிக்க உளவுத்துறைகள் ஒத்துழைப்பு வழங்கின என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten