[ ஞாயிற்றுக்கிழமை, 01 செப்ரெம்பர் 2013, 01:09.33 PM GMT ]
வல்வெட்டித்துறை பகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடம், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மீனவர் சங்கத்தின் தலைவர் முத்துதம்பி கந்தசாமி,
யாழ்.மீனவர்களுக்கு நேரும் இந்த அநீதி தொடர்பில் எவரும் எவ்விதமான கவனத்தையும் செலுத்தவில்லை.
இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பது என்று மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடலில் தினமும் இந்திய மீனவர்களுக்கும் எமது மீனவர்களுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. இந்திய மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களையும் வலைகளையும் சேதப்படுத்துகின்றனர்.
பிரதேச அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைவருக்கும் இது பற்றி தெரியப்படுத்திய போதும் இதுவரை அதற்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் சகல அரசியல் அமைப்புகள் மீது மீனவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். பல மணித்தியாலங்கள் மரணத்துடனும் கடல் வளங்களை கொள்ளையிடுவோரோடும், கடலில் போராடினாலும் குடும்பத்தை கொண்டு நடத்த பணத்தை சம்பாதிக்க முடியவில்லை.
இதனால் எமது மீனவர் சங்கம் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒரு தீர்மானித்திற்கு வந்துள்ளது என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmu4.html#sthash.8hrGZ0qD.dpuf
Geen opmerkingen:
Een reactie posten