தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தில் இடம்பெற்றவை!

நவநீதம்பிள்ளை இலங்கையில் கால் வைக்க முடியாது - தமது பிணங்களின் மீது தான் அது நடக்கும் என்று மிரட்டி வந்த சிங்கள அரசியல்வாதிகள் எவருமே, இப்போது வாய்திறக்காமல் மௌனமாக இருப்பதைக் காணமுடிகிறது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களே கடந்த காலங்களில் நவநீதம்பிள்ளை இலங்கை வந்து நிலைமைகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று எச்சரித்து வந்தனர்.


போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் இதுபோன்ற எத்தனையோ மிரட்டல்களை விடுத்திருந்த போதிலும், நவநீதம்பிள்ளை கொழும்பில் கால் வைத்த போது எல்லோருமே பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்கள். நவநீதம்பிள்ளை கொழும்பு வந்ததும், பெரியளவில் அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரித்த எவருமே இதுவரை அவ்வாறான போராட்டங்களை கொழும்பில் நடத்தவில்லை.

கடந்த திங்கட்கிழமை, ராவண பலய அமைப்பு மட்டும் ஒரு போராட்டத்தை கொழுமுபிலுள்ள இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியின் செயலகம் முன்பாக நடத்தியிருந்தது. அதில் கூட, வழக்கமாக, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு பெருமளவிலானோர் பங்கேற்கவில்லை.

சுமார் 100இற்கும் குறைவானோரே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விட பலமடங்கு அதிகமான பொலிசாரே அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். சிங்களத் தேசியவாதத் தலைவர்களும் அமைப்புகளும், நவநீதம்பிள்ளையின் வருகையை விரும்பாது போனாலும், இத்தகைய கட்டத்தில் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச அமைப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கொடுத்த பொறுப்பை நிறைவேற்றவே, நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளார். அவரது பயணத்தைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளக் கூடிய எந்த நடவடிக்கையும் இலங்கைக்கு மேலும் சிக்கலையே கொண்டு வரும் என்ற யதார்த்தத்தை சிங்களத் தேசியவாத தலைமைகள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டுள்ளன என்பது முதல் காரணம்.

அதற்காக, நவநீதம்பிள்ளையின் வருகையை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக கருத முடியாது. நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு அவர்கள் ஒத்துழைக்காது போனாலும், வேறுவழியின்றி அமைதியாக இருந்து கொள்கிறார்கள்.

அடுத்து, போருக்குப் பிந்திய மனித உரிமை மீறல்கள் தெற்கிலுள்ள மக்களுக்கும் பல உண்மைகளை புரிய வைத்துள்ளது. குறிப்பாக அண்மையில் வெலிவேரியவில் நடந்த தாக்குதல் சம்பவம், போரின் போது என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களை சிறியளவிலேனும் யோசிக்க வைத்துள்ளது.

இதனால், நவநீதம்பிள்ளையின் வருகை இலங்கைக்குப் பாதகமானது என்ற கருத்து, தெற்கில் வலுக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலைமைக்குக் காரணம், அரசாங்கமும், இராணுவமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவகையில், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இது கைகொடுக்கும் ஒன்றாகவும் கருதலாம். போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, தெற்கில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

போரில் வெற்றியை ஈட்டிக் கொடுத்த படையினரை, குற்றக் கூண்டில் நிறுத்த விடமாட்டோம் என்று அரசாங்கமே, குரல் எழுப்பி தெற்கிலுள்ள மக்களை தூண்டிவிட்டது. ஆனால், போரில் போது நடந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறியே ஆக வேண்டிய சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருவதை அண்மைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

உலக நாடுகள் இதனை வலியுறுத்திய போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மெல்ல மெல்ல தனது பிடியைத் தளர்த்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, திருகோணமலை மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் தனது இறுக்கமான பிடியைத் தளர்த்தியுள்ளது.

இவை தொடர்பாக முற்றிலும் சுதந்திரமானதாகவோ, நடுநிலையானதாகவோ விசாரணைகளை மேற்கொள்ளத்தக்க பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்காது விட்டாலும், ஓரளவுக்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய விசாரணைகளில் விளைவாக, படையினர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கூட, அதற்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பப் போவதில்லை என்பதை, நவநீதம்பிள்ளையின் பயணம் பெரும்பாலும் சுமுகமாகவே இடம்பெறுவதைக் கொண்டு உணர முடிகிறது.

நவநீதம்பிள்ளையையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையையும், இலங்கைத் தீவையே விழுங்கப் போகும் பெரிய பூதமாகக் காண்பித்து, தெற்கிலுள்ள மக்களை மிரட்டி வந்த அரசாங்கத்துக்கும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளுக்கும் சரி, இனிமேல் அத்தகைய விம்பத்தை காட்ட முடியாது. மிரட்ட முடியாது.

அதுபோலவே, தமது பிணங்களில் மீது கால்வைத்து தான் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரமுடியும் என்று மிரட்டியவர்களாலும் இனிமேல் அத்தகைய மிரட்டல்களை விடுக்க முடியாது.







எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர். 


நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.'என அவர் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாக கேள்விநேரத்தின் போது ஆணையாளர் கூறினார்.

மூன்று அமைச்சர்களும் சேர்ந்து விட்ட நிலைமையில் கடந்த வாரத்தில் இவ்வகையான கேவலப்படுத்தல்கள் உச்சத்திற்கு போயிற்று என்றும் அவர் கூறினார்.

புலிகள் பற்றி தனது நிலைப்பாட்டை hன் தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் அதை ஈவிறக்கமற்ற கொலைகார இயக்கமென கூறியதாகவும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இந்த இயக்கத்திற்கு புகழ்மாலை சூட்டுவதை தவிர்க்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார்.

புலிகள் இயக்கம் பல உயர்களை கொன்றொழித்துள்ளது. அது பல குற்றச்செயல்களை புரிந்த இயக்கம். புலிகளை போற்றுகின்ற புலம்பெயர்ந்தோர் இதுபோன்ற இறக்கமற்ற இயகத்தின் புகழ்பாடலுக்கு இடமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்' எனக்கூறினார்.


'ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.


இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தது எனவும் இலங்கை ஓர் எதேச்சதிகார அரசுக்கான சில அறிகுறிகளை காட்டியது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'யுத்தத்தின் முடிவு ஒரு புதிய துடிப்பான சகலரையும் அனைத்துபோகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும் இலங்கையில் எதேச்;சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது' என அவர் கூறினார்.

இந்த நாட்டில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் கூறினார்.

' பயம் காரணமாக சுயத்தணிக்கை காணப்படுவதாகவும் தாம் எழுதப்பயப்பிடுகின்ற அல்லது பத்திரிக்கை ஆசிரியர் வெளியிடதுணியாத கட்டுரைகள் உள்ளனவென ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

சார்க் நாடுகள் பலவற்றில் உள்ளது போன்று இலங்கையிலும் 'தகவல்பெறுவதற்கான உரிமை சட்டத்தை' கொண்டுவரவேண்டுமென நான் கூறியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.

ஒரு இராஜதந்திர ரீதியான உப்புச்சப்பற்ற அறிக்கை தருவாரென கூறியோருக்கும், அதே பழைய அறிக்கையை தருவாரென கூறிய சில அமைச்சர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆணையாளர் நவீபிள்ளே தான் இங்கிருந்தபோது தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதை உறுதிசெய்தார்.

உலகின் எப்பகுதியிலும் தான் இதுவரை மேற்கொண்ட விஜயங்களில் இதுவே ஆகக்கூடிய நாட்களை கொண்டிருந்தது என அவர் கூறினார்.

' இப்போது எனது விஜயத்தின் மிகவும் கவலைதரும் அம்சங்கள் பற்றி கூறவிரும்புகின்றேன். குறிப்பாக இரண்டு மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள் உட்பட மனித உரிமைகளுக்காக போராடுபவர்களும் சாதாண பிரசைகளும் என்னை சந்தித்தமைக்;காக அல்லது சந்திக்க விரும்பியதற்காக மிரட்டப்பட்டனர் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.இவைப்பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன' என அவர் கூறினார்.

மேலும், தன்னை சந்தித்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மதகுருமார்கள் மீது கடும் கண்காணிப்பு இருந்ததாக கிடைத்த செய்திகளால் தான் கவலையடைந்ததாகவும் அவர் கூறினார்.

பொலிஸின் நடவடிக்கைகள் ' அதிவிசேடமானதாகவும் மிதமிஞ்சியதாகவும்'இருந்தன எனவும் யுத்தம் முடிந்த நாடுகளில் தான் இப்படி எங்கும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

' நான் முல்லைத்தீவுக்கு போவதற்கு முன்னரும் போய்வந்தததன் பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அப்பகுதி மக்களை சந்தித்தனர். திருகோணமலையில் நான் சந்தித்த மக்களிடம் நாம் என்னபேசினோம் என விசாரிக்கப்பட்டுள்ளது' என பிள்ளே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக தான் கடுமையாக கவனிக்கப்போவதாக அவர் கூறினார்.

மனித உரிமை பிரச்சினைகளை 27 வருட யுத்தகால பிரச்சினைகள் எனவும் முழுநாட்டினது பிரச்சினைகள் எனவும் ஆணையாளர் பிள்ளே பிரித்துக்காட்டியுள்ளார்.

வெலிவேரிய சம்பவம், வடக்கை இராணுவமயப்படுத்தல், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் பல மனித உரிமை பிரச்சினைகள் பற்றியும் அவர் பேசினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் செயலிழந்து போனதன் பின்னணியில் ஆணைக்குழுக்கள் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என அவர் கூறினார்.

' ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten