தமிழ்நாடு, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டில், இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால், முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
உயிர் தியாகம் செய்த, அந்த இலங்கை தமிழர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவுச்சின்னம், தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைக்கப்படுகிறது.
நினைவுச்சின்னம் அருகில், தமிழ் அன்னை சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது. நினைவுச்சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என, இலங்கை தமிழர் களுக்கு ஆதரவான இயக்கத்தின் சார்பில் அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நினைவு சின்னத்தை திறந்து வைப்பதன் மூலம், உலக தமிழர்களின் அன்பை பெற முடியும். இலங்கை தமிழர்களின் ஆதரவு வாக்குகளும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்பதால், நினைவு சின்னம் திறப்பு விழாவில், முதல்வர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmr3.html#sthash.H4S7XeGQ.dpuf
Geen opmerkingen:
Een reactie posten