தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பண மோசடி செய்த மூன்று சந்தேக நபர்கள் கைது - கஞ்சா கடத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 05:37.44 AM GMT ]
தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மூலம் 15 லட்சம் ரூபா பரிசு பணம் கிடைத்துள்ளதாக கூறி, அதனை பெற்று கொள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாவை ஏமாற்றி பெற்று அதனை தமது வங்கி கணக்கில் வைப்பிலிட்ட மூன்று சந்தேக நபர்கள் ரக்குவனை நகரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரக்குவனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் இவர்கள் இந்த பணத்தை பெற்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, ரக்குவனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெல்மதுல்லை நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து பெற்று கொள்ளப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் வங்கி கணக்கின் ஊடாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல மற்றும் மாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
மாவ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள இரண்டு கைதிகள் சிறையில் இருந்தவாறு கைத்தொலைபேசி மூலமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நபர்கள் மோசடி செய்து பெற்ற பணத்தை கைது செய்யப்பட்ட நபர்களை பயன்படுத்தி வேறு வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பெல்மதுல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்தில் பாரியளவில் கஞ்சா கடத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர்
அநுராதபுரத்தில் கார் ஒன்றில் பயணித்தவர்களிடம் இருந்து 15 கிலோகிராம் கஞ்சா கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் ராணுவ முகாமில் மேஜராக கடமையாற்றுபவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை அநுராதபுரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றின் அருகில் கப் வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 03:51.34 AM GMT ]
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டு முதல் பிரித்தானியாவால், இலங்கைக்கு 20 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் உதவியளிக்கப்பட்டுள்ளது.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten