தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

தேர்தல் விதிமுறைகளை மீறி வவுனியா வடக்கில் வீடு வீடாகச்சென்று வெற்றிலைக்கு ஆதரவு திரட்டும் சமுர்த்தி அரச உத்தியோகத்தர்கள்

சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கில் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 07:14.59 AM GMT ]
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அமைச்சுக்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாதிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும் என்று நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பொலிஸ் உட்பட சிவில் நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி அதற்கான தனியான அமைச்சை ஏற்படுத்தியதுடன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சியை செயலாளராக நியமித்தார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் மேலும் தெரிவித்த ஹக்கீம், புதிய அமைச்சுக்கு சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் சம்பந்தமான அதிருப்தி, புதிய அமைச்சை ஏற்படுத்துவதற்கான நோக்கமாக இருக்கவில்லை.
சர்வதேசத்தில் தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களே பொலிஸ் துறைக்கான தனியான அமைச்சை ஏற்படுத்தியமைக்கான காரணமாக இருக்கலாம் என்றார்.
பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச சமூகம் இதனை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி வந்ததது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வரவுள்ள சூழ்நிலையில், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம், இந்த புதிய அமைச்சை ஏற்படுத்தி உள்ளதா என்று அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டபோது,
இது தொடர்பில் அப்படியான கோணத்தில் நோக்குவதை விட காலம் கடந்தேனும் இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதை பாராட்ட வேண்டும் என்றார்.
எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் இலங்கை சமூகத்தை இராணுவமயப்படுத்துவதற்குமான மற்றுமொரு நடவடிக்கையாகவே புதிய அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgty.html#sthash.jH4rKNIT.dpuf

தேர்தல் விதிமுறைகளை மீறி வவுனியா வடக்கில் வீடு வீடாகச்சென்று வெற்றிலைக்கு ஆதரவு திரட்டும் சமுர்த்தி அரச உத்தியோகத்தர்கள்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 08:32.09 AM GMT ]
எந்தவித வித தகைமைகளும் இல்லாது வெறும் அரச ஆதரவாளர்கள் என்ற காரணத்தினால் உள்வாங்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களில் வவுனியாவடக்குப்பிரதேசத்தில் உள்ள இருபது கிராம சேவையாளர் பிரிவுகளில்....
கணிசமான பிரிவுகளில் கள உத்தியோகத்தர்களாக கடமை புரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்: அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என்ற தேர்தல் விதி முறையை மீறி வீடு வீடாகச்சென்று அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்துவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
கடந்தவாரம் கனகராயன்குளம் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் சமுர்த்திக்கொடுப்பனவு வழங்கப்போவதாக மக்கள் வரவழைக்கப்பட்டு அரச ஆதரவுக்கட்சியான ஈ.பி.டி.பி யின் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் ஒலுமடு கிராம சேவகர் பிரிவிலும் இன்றைய தினம் மருதோடை கிராம அலுவலர் பிரிவிலும் அப்பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி அலுவலர்கள் சமுர்த்தி மீளாய்வு செய்வதற்கான கூட்டம் என மக்களை அழைத்து அக்கூட்டத்தில் அரசுக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரத்தினை அரசவேட்பாளர்களின் ஆதரவுடன் நடாத்தியுள்ளது.
சமுர்த்தி என்ற ஏழ்மை முத்திரையை வைத்து அரசியல் லாபம் தேட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முனைவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். தங்களுக்கு நியமனம் வழங்கிய நன்றிக்கடனுக்காக தமிழ்த்தேசியத்தை விற்று முள்ளி வாய்க்கால் இன அழிப்பினை மறந்து சில இளைஞர்யுவதிகள் அரசுக்கு ஆதரவாக வெளிப்படையாக பிரச்சாரம மேற்கொள்கின்றார்கள்.மருதோடை கிராம அலுவலர் பிரிவில் அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களது பெயர்கள் இன்று அங்குள்ள கடை ஒன்றின் முன்னால் வைத்து பதிவு செய்யப்பட்டதாகவும் அரசுக்கு வாக்களித்தாலே தொடர்ந்து சமுர்த்தி உதவிகளைப்பெற முடியும் என்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மக்களை பயமுறுத்துவதாகவும் அப்பிரதேச முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த புதன் கிழமை சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் ‘தேர்தலில் அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கூட்டம்’ இடம்பெற்றுள்ளது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமுர்த்தி முகாமையாளர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்துள்ளார். அதாவது தேர்தல் நிறைவடையும் வரை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வேலை எதனையும் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளமையானது தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர்களை மேலும் மேலும் ஈடுபடுத்துவதற்கேயாகும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இத்துடன் நின்று விடாது ஒவ்வொரு வீடுவீடாகவும் சென்று வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு மடிப்பிச்சை கேட்பதாகவும் மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஜனநாயகப்பண்பற்ற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgt1.html#sthash.tey5UtaV.dpuf

Geen opmerkingen:

Een reactie posten