தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

ஊடகவியலாளரின் வரலாற்றை தேடிச் சென்ற அதிசய திருடர்கள்: ஜே.வி.பி கிண்டல்

அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சட்டத்தரணியை நியமித்தது இலங்கை தூதரகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 11:43.59 AM GMT ]
சவூதியில் அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் சார்பில் வாதாட ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் சவூதி சட்டத்தரணி ஒருவரை அமர்த்தியுள்ளது.
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தைத் சேர்ந்த அமரலதா என்ற 41 வயதான பெண் அமெரிக்க பொறியிலாளரை திருமணம் செய்திருந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இலங்கை பெண்ணை அமெரிக்க கணவர் கொலை செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமரலதாவின் கொலை தொடர்பாக விசாரணைகளை நடத்திய சவூதி அதிகாரிகள் அமெரிக்க கணவரை கைது செய்தனர். இந்த நிலையில் கொலையுண்ட இலங்கை பெண் சார்பில் தாம் சவூதி சட்டத்தரணி ஒருவரை நியமித்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் வளைகுடா செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு சவூதியின் தஹமம் பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அமரலதா, வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சென்றிருந்தார்.
ஏற்கனவே திருமணம் செய்திருந்த அமரலதாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதுடன் அவர் விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில் அவர் சவூதியில் அமெரிக்கரான பொறியிலாளரை திருமணம் செய்து கொண்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட நபர் கொலைக்கான இழப்பீட்டு பணமாக 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்திரு்நதது.
குற்றவாளியிடம் இழப்பீட்டை செலுத்த பணம் இல்லை எனவும் அவர் 10 ஆயிரம் ரூபா இலங்கை பணத்தை செலுத்த தயாராக இருப்பதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்தில் தீர்வுகாணப்படவில்லை.
இந்த நிலையில் பெண்ணுக்காக வாதாட சட்டத்தரணி ஒருவரை இலங்கை தூதரகம் நியமித்துள்ளது. குற்றவாளியான அமெரிக்கர், கிறிஸ்தவராக இருந்து இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார். அவர் தனது மனைவியை கொன்று அந்த உடலை எரிவாயு மற்றும் பெற்றோலியத்தை எடுத்துச் செல்லும் குழாயில் மறைத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், குற்றவாளி பணியாற்றிய நிறுவனத்தின் குழாய் ஒன்றில் சடலம் ஒன்று இருப்பதாக சவூதியின் தெற்கு மாகாண பொலிஸாருக்கு அந்த நிறுவனம் தெரியப்படுத்தியதை அடுத்து இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சீன மற்றும் சவூதி தொழிலாளர்கள் வழங்கிய தகவல்ளை அடுத்து குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர்.
http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp1.html#sthash.BIO1Hmvs.dpuf


ஊடகவியலாளரின் வரலாற்றை தேடிச் சென்ற அதிசய திருடர்கள்: ஜே.வி.பி கிண்டல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 12:27.42 PM GMT ]
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரமவின் வீட்டில் கொள்ளையிட சென்றதாக கூறப்படும் கொள்ளையர்கள் அதிசயமானவர்கள் என்று ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கொள்ளையர்கள் அதிசயமான கொள்ளையர்கள், ஊடகவியலாளரின் வரலாற்றை தேடி, சான்றிதழ்களை பரிசோதித்து, ஆவணங்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அந்த இடம் கொள்ளையடிக்க பொருத்தமான இடமா என்பதை அறிய அவர்கள் அப்படி செய்திருக்கலாம்.
இந்த சம்பவம் தொடர்பில், அது வரிசைப்படுத்தப்பட்ட விதம், சம்பவத்தின் முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்பன நியாயமான சந்தேகத்தை ஏற்படுகிறது என்பதால் அந்த சந்தேகத்தை நிர்வதிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
அதேபோன்று மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருமாறு அழைக்கின்றனர். மறுபுறம் அரசாங்கத்தின் அடிவருடிகள் அவர் வருகிறார் என்று கூக்குரலிடுகின்றனர்.
இலங்கைக்கு இன்று வந்த நவநீதம்பிள்ளை தொடர்பில் பெரும் வாத, விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு அதனை சார்ந்த ஏனைய அமைப்புகளும் உலகத்தில் அவசியமானவை என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.
நாடுகளுடான பிணைப்பு, நிலைப்பாடு, நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது, நாடுகளில் நியாயத்தை கட்டியெழுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்புகள் தேவைப்படுவதாக நாங்கள் எண்ணுகிறோம்.
எனினும் தற்போது இந்த அமைப்பு இந்த எதிர்பார்ப்புகளின் படி செயற்படுவதில்லை. நாடுகள் இடையில் சம உரிமைகள், நியாயம், இறையாண்மையை பாதுகாப்பதில்லை.
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் அரசியல், யுத்தம் தொடர்பான நிகழ்ச்சி நிரலை செயற்படுவதற்காகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நாடுகள் இடையில் உள்ள சுதந்திரம், இறையாண்மையை பாதுகாக்கும் முனைப்புகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ளாது என்பதற்கான பல உதாரணங்கள் இருக்கின்றன.
இலங்கையில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்ற தற்போதைய அரசாங்கமே உதவி வருகிறது.
தமது அதிகாரத்தை பாதுகாத்து கொள்ளவும் அதிகாரத்தை கைப்பற்றவும் மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றின் மீது பாரதூரமான அச்சுறுத்தலை விடுத்து வருகிறது.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர் பலர் கொலை செய்யப்பட்டனர். பல ஊடக நிறுவனங்கள் தீவைக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். சவரக்கத்திகளை கொண்டு வெட்டு காயங்களை ஏற்படுத்தினர்.
எனினும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணைகளை நடத்தவோ, தண்டனைகளை வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவங்களில் பின்னணியில் அரசாங்கம் இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
எந்த குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை நடத்தவும் குற்றவாளிகளை கைதுசெய்யவும் பொலிஸ் திணைக்களத்திற்கு முடியும். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதானது அரசாங்கத்தின் ஆலோசனை இதன் பின்னணியில் இருப்பது தெளிவானது என்றார்.
 http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp2.html#sthash.EpTIIcfR.dpuf


Geen opmerkingen:

Een reactie posten