தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

நான் சர்வதிகாரியா?: பதறுகிறார் மஹிந்த

நான் சர்வதிகாரியா?:  பதறுகிறார் மஹிந்த

ஜனநாயக ஆட்சியின் வாழ்ந்து வரும் பலர், தனக்கு எதிராக சர்வாதிகாரி என்ற பட்டத்தை சூட்டி வருவதாகக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரி என தம்மை குற்றம் சுமத்தக் கூடிய அளவிற்கு கருத்துச் சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதற்காக தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பகிரங்கமான முறையில் தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியில் இல்லாத வார்த்தைகளினால் இணைய தளங்களிலும் ஏனைய அச்சு ஊடகங்களிலும் தமக்கு எதிராக சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு குற்றம் சுமத்தும் அளவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் உச்ச அளவில் கருத்துச் சுதந்திரத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் யார் ஆட்சி நடத்த வேண்டுமென தீர்மானிப்பதாகவும் அதற்கான உரிமையை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகளும் சர்வதேச அரங்கில் நாட்டை காட்டிக் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எமது நாடு மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்தவே சிலர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சகல மாகாணங்களும் அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி மஹந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten