தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அறுவருக்கு இரு வருட வகுப்பு தடை

உயர்தரப் பரீட்சைக்கு கண்விழித்து கற்பதற்கென தாயை ஏமாற்றி பியர் வாங்கி குடித்த யாழ்.மாணவன் - கைதடி தெற்கு வடிசாலைப்பகுதியில் பட்டப்பகலில் திருட்டு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:53.03 AM GMT ]
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வருகின்ற பாடசாலை மாணவன் ஒருவர் இரவில் கண் விழித்துக் கற்பதற்காக குளிர்பானம் என தாயரை ஏமாற்றி பணம் வாங்கி பியர் வாங்கி குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சுழிபுரம் பகுதியிலுள்ள பாடசாலை மாணவன் ஒருவரே ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரவில் கண் விழித்து கற்க வேண்டும் என தாயாரிடம் மாணவன் குளிர் பானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
இதனை கேட்ட தாயார் தினமும் பணம் கொடுத்துள்ளார். இதனைக் கொண்டு மாணவன் தினமும் ரின்னில் அடைக்கப்பட்ட பியரை வாங்கி குடித்துள்ளார்.
நிறைய ரின்கள் வீட்டில் சேர்ந்து விட அவற்றை வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்யக் கொண்டு சென்றபோது இவ்வளவு பியரை யார்? குடித்தது என வியாபாரி வினவியபோதே விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகனின் இந்தச் செயலால் தாயார் அதிர்ச்சியடைந்தள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதடி தெற்கு வடிசாலைப்பகுதியில் பட்டப்பகலில் திருட்டு
கைதடி தெற்கு வடிசாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் பட்டப்பகலில் நகை, மற்றும் பணத்தை திருடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பட்டப்பகலில் வீட்டிற்குள் யாருமற்ற நிலையில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த மூன்றரை பவுண் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
எனினும் அவ்வீட்டில் மேலும் ஒருதொகைப்பணம், நகை இருந்த நிலையில் குறிப்பிட்ட நகை, பணம் திருடப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அறுவருக்கு இரு வருட வகுப்பு தடை
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:06.02 AM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட வகுப்புத் தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது.
கடந்த 31ம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 31ம் திகதி முதல் இரண்டு வருட மாணவர்களையும் நேற்று முன்தினம் புதன்கிழமை வரையிலான 14 நாட்கள் பல்கலைக்கழத்திற்கான அனுமதியினை மறுத்திருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் அறுவருக்கான பல்கலைக்கழக அனுமதியினை இரண்டு வருடத்திற்கு மறுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten