[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 01:45.21 PM GMT ]
வட மாகாணத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதன் காரணத்தை புலம் பெயர் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் லண்டன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில் சம்பந்தன் லண்டன் விஜயம் செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டன் வாழ் தமிழர்களுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை, வடக்கு தேர்தலை நியாயமான முறயில் நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு சம்பந்தன், பிரிட்டன் வெளிவிவகார அமைச்சிடம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கைப் போன்றே தெற்கிலும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சம்பந்தன் கோரியுள்ளதாக குறித்த சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏ.ரீ.எம். அட்டைத் தகவல்கள் களவாடப்பட்டு மோசடி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 01:51.01 PM GMT ]
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விசேட இலத்திரனியல் கருவியொன்றின் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதிலும் ஏ.ரீ.எம். அட்டைத் தரவுகள் இவ்வாறு களவாடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.ரீ.எம் நிலையங்களில் நூதனமான முறையில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டு வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
தகவல்களை சேகரித்து போலி அட்டைகளை தயாரித்து வாடிக்கையாளர்களின் பணம் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அண்மையில் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அண்மையில் ஜெர்மனியில் இருந்து இலங்கைக்கு வந்தவர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் காலத்தில் தப்பிச் சென்ற குறித்த நபர், விசேட இலத்திரனியல் கருவியை கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten