தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து விலகி விடுவோம்: ஜாதிக ஹெல உறுமய !

13வது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாதகமான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எதனை கூறினாலும், நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 13வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் பாதுகாக்கும் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கொள்கையில் ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் உள்ளது.
இந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, 13வது திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஹெல உறுமய பங்கேற்கும்.
அரசாங்கம் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஏற்று கொள்ளக் கூடிய சாதகமான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகி விடும் என்று தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten