மியான்மரில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்த புத்த மதத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் நாடே அமைதி இழந்து நிற்கிறது.
இக்கலவரங்கள் சற்றி தணித்திருந்த நிலையில், நேற்று புத்த மதப் பெண் ஒருவர் முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
இதனை கேள்விபட்ட மக்கள் காவல்நிலையத்தை அணுகி குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர்.
பொலிசார் இதற்கு மறுக்கவே, 12 பேர் அடங்கிய கும்பலொன்று முஸ்லிம் மக்களின் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் யாருக்கும் சேதமில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இச்சம்பவம் நடந்ததாக, விராத்து என்ற துறவி ஒருவர் தன்னுடைய இணையத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten