தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

பொலிஸ் துறைக்காக தனியான புதிய அமைச்சு: ஜனாதிபதி அதிரடி முடிவு - 13 பொலிஸார் மாயம் !


பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரித்து, தனியான நிறுவனமாக மாற்றியமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் சட்டம் மற்றும் அமைதி என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தை செயற்படுத்துவது இந்த புதிய அமைச்சுக்கான பணியாகும். கடந்த 16 ஆம் திகதி 1823-70 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி இந்த புதிய அமைச்சை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்க அமைச்சின் செயலாளராக முன்னாள் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த புதிய அமைச்சை ஏற்படுத்த எண்ணியிருக்கலாம் என பேசப்படுகிறது.
முக்கியமான பொலிஸ் அதிகாரங்களை மத்திய பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கி விட்டு, ஏனைய அதிகாரங்கள் மாகாண பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
13 பொலிஸார் மாயம் - அமைச்சர் தினேஷ் குணவர்தன
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் பணியாற்றிய 13 பொலிஸார் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கான பொலிஸார் பொலிஸ் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி வரை 5263 பேர் சேவையில் இருந்து விலகி சென்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியில் இருந்து இதுவரை 593 பேர் பொலிஸ் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.
13 பொலிஸார் பற்றிய தகவல்கள் இல்லை எனவும் அவர்கள் தாம் சேவையில் இருந்து விலகியது தொடர்பில் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தினேஷ் இதனை கூறினார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx1.html#sthash.AcThMaF4.dpuf

Geen opmerkingen:

Een reactie posten