[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 04:32.59 AM GMT ]
உள்நாட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சின் கீழ் இலங்கை பொலிஸ்துறை கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அதன் மீதான இராணுவச் செல்வாக்கு குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, இலங்கை பொலிஸ்துறையை பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளதாக, அரசாங்கம் கூறியுள்ளது.
போர்க்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இருந்த வந்த இலங்கை பொலிஸ்துறையை, 2001 டிசெம்பரில் பதவிக்கு வந்த ஐதேக அரசாங்கம், உள்நாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வந்தது.
எனினும், 2004ம் ஆண்டு தொடக்கத்தில், அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மீண்டும் இலங்கை பொலிஸ்துறையை பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார்.
தற்போது, 80 ஆயிரம் பொலிஸாரைக் கொண்ட இலங்கை பொலிஸ்துறைக்குப் பொறுப்பாக, உள்நாட்டு சட்டம் ஒழுங்கு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதுகாப்பு அமைச்சின் ஆதிக்கத்தில் இருந்து அது விடுபட்டுள்ளதாக, அரசாங்கம் கூறுகின்ற போதிலும், இலங்கை பொலிஸ்துறைக்குப் பொறுப்பான சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராகவும், முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சியே நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பொலிஸ்துறையை பாதுகாப்பு அமைச்சில் இருந்து விடுவித்து சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணானதாகும்.
முன்னாள் இராணுவ அதிகாரியை இலங்கை பொலிஸ்துறைக்குப் பொறுப்பாக நியமித்துள்ளதன் மூலம், மீண்டும் புதிய வடிவில் இராணுவத்தின் செல்வாக்கே வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தாம் விரும்பவில்லை என்றும், பொலிஸ்துறை சிவில் நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், இலங்கை பொலிஸ்துறையின் மீதான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு குறையப் போவதில்லை என்றும் கருதப்படுகிறது.
இலங்கை பொலிஸ் துறையின் கீழ் உள்ள சிறப்பு அதிரடிப்படையும், புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்று கட்டுக்குருந்தவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடித்து வெளியேறிய 403 அதிரடிப்படையினரின் அணிவகுப்பு நிகழ்வில், கோத்தபாய ராஜபக்சவே பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட உள்நாட்டு சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgs1.html#sthash.ZH5tttyb.dpuf
அரசின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: மங்கள சமரவீர
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 06:04.14 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மக்களின் மனித உரிமைகளை மீறுவது தொடர்பாக நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு தெரிவிக்கப்படும்.
ரத்துபஸ்வல சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் என்பதால், அது பற்றிய தகவல்கள் அவரிடம் முன்வைக்கப்படும்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளது என்றார்.
அதேவேளை இலங்கை வரும் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பில் கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அவருடன் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பில் கட்சியின் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் சிறிகொத்தவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய, மங்கள சமரவீர, ஸ்ரீநாத் பெரேரா உட்பட சிலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய தேசியக்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் சந்திக்க தயாராகி வருகின்றன.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgs4.html#sthash.EquuiY2w.dpufஇலங்கையின் தற்போதைய அரசாங்கம் மக்களின் மனித உரிமைகளை மீறுவது தொடர்பாக நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு தெரிவிக்கப்படும்.
ரத்துபஸ்வல சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் என்பதால், அது பற்றிய தகவல்கள் அவரிடம் முன்வைக்கப்படும்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளது என்றார்.
அதேவேளை இலங்கை வரும் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பில் கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அவருடன் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பில் கட்சியின் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் சிறிகொத்தவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய, மங்கள சமரவீர, ஸ்ரீநாத் பெரேரா உட்பட சிலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய தேசியக்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் சந்திக்க தயாராகி வருகின்றன.
Geen opmerkingen:
Een reactie posten