தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

வெலிமடையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவு

முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 07:03.46 AM GMT ]
வரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி வரை எவரும் ஆலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தடை விதித்து சிலாபம் மேலதிக நீதவான் கே.கே. லியனகே இன்று உத்தரவிட்டார்.
ஆலயத்தில் நடைபெறும் பலி பூஜைகளுககு எதிராக சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்த தயாராகி வருவதாகவும், இதனை இதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் முந்தல் பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் பலி பூஜையை நிறுத்த வேண்டும் என பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கு எதிராக அந்த அமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இதன் காரணமாக கடந்த வருடம் ஆலயத்தில் பலி பூஜைகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக இந்த பூஜை நடைபெற்று வருகிறது.
வெலிமடையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 06:54.31 AM GMT ]
10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிமடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 கிடைத்த முறைப்பாட்டை அடுத்து வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஊவா பரணகம - லுணுவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten