நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களில் 4 பேர் பலி - 32 பேர் காயம் - பதுளையில் காட்டுத் தீ காரணமாக வனாந்தரத்திற்கு பாதிப்பு
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 07:20.08 AM GMT ]
இந்த விபத்து தம்புத்தேகம இக்கிரிவெவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகும் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டுவதற்கு மிகவும் நுட்பமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
அனுராதபுரம் நோக்கி சென்ற ஜீப் வண்டி பாதை விட்டு விலகி வேம்பு மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாதையில் விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்களில் கட்டுப்பாட்டை இழந்தது மின் கம்பம் ஒன்றில் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீரவில இராணுவ முகாமில் சேவையாற்றிய வந்த 28 வயதான இராணுவ வீரரே பலியாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் சிலாபம் பிங்கிரிய பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 பெண்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஹட்டன் திம்புலபத்தனை பிரதேசத்தில் வகித்து வந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறினர்.
(இரண்டாம் இணைப்பு)
பிங்கிரிய பஸ் அனர்த்தத்தில் 30 பேர் படுகாயம்
பிங்கிரிய - மரதவில பிரதேசத்தில் கலம்பொல நோக்கி சென்று பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.45 அளவில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 10 ஆண்கள், 12 பெண்கள், 6 சிறுவர்கள், 2 சிறுமிகள் காயமடைந்த நிலையில், 11 பேர் பிங்கிரிய வைத்தியசாலையிலும் 15 பேர் சிலாபம் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதவிர, நால்வர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
ஆடிகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வீடொன்றுக்கு கம்பளையில் இருந்து சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்களே அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி விபத்தை அடுத்து தப்பிச் சென்றுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளையில் காட்டுத் தீ காரணமாக வனாந்தரத்திற்கு பாதிப்பு
பதுளை மாவட்டத்தின் எல்லை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திக்காராவ வனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் இதுவரை 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயால் வன விலங்குகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலங்குகளை வேட்டையாடவென காட்டிற்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மகிந்த அரசாங்கத்தை கவிழ்க்க நுட்பமான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன: விமல் வீரவன்ஸ
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 06:54.26 AM GMT ]
மாத்தளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டத்தின் பங்காளியாக செயற்பட்டு வருகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை பல்தேசிய நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான வலுவற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியொன்றை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி ஒன்று ஏற்பட்டால், பல்தேசிய நிறுவனங்களின் கைக்குள் இலங்கையின் பொருளாதாரம் செல்வதை தடுக்க முடியாது.
தற்போதைய அரசாங்கம் பல்தேசிய நிறுவனமான நியூசிலாந்தின் நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்யும் பால் மாவில் டி.சி.டி இரசாயனம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பால்மாவை சந்தையில் இருந்து அப்புறப்படுத்தியது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதேவளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்வரும் தேர்தல்களில் கவிழ்ப்பதாக நாட்டுக்கு எதிரான சக்திகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையில் முறுகலை ஏற்படுத்தி, முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசாங்கத்திற்கு எதிராக திருப்ப இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மட்டுமே பாதுகாக்கின்றது. சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளை பிரிக்க முயன்று வருகின்றனர்.
அடுத்த கட்டமாக சிங்கள பௌத்த மற்றும் கிறிஸ்தவர்கள் இடையில் மோதல்களை தோற்றுவித்து, அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயற்படுகிறது என்ற நிலைமையை ஏற்படுத்தி, கிறிஸ்தவர்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைப்பதை தடுக்க இந்த சக்திகள் திட்டங்களை வகுத்துள்ளன என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten