தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

இலங்கையில பசளைகளின் விளம்பரங்களுக்கும் தடை!

இலங்கையில் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 03:01.45 AM GMT ]
இலங்கையில் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்பட  உள்ளதாகத் நம்பகமாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு தபால் கட்டணங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, ஐந்து ரூபா பெறுமதியான சாதாரண தபால் கட்டணம் 12 ரூபா முதல் 15 வரையில் உயர்த்தப்பட உள்ளது.
வர்த்தகத் தபால் கட்டணம் 15 ரூபாவிலிருந்து 20 – 25 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பதிவுத் தபால் கட்டணம் 10 – 20 ரூபா வரையில் உயர்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தபால் கட்டண உயர்வினால் மக்கள் பாதிக்கப்படுவர் எனவும், இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில பசளைகளின் விளம்பரங்களுக்கும் தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 03:23.35 AM GMT ]
நியூஸிலாந்தின் பால் மா தொடர்பில் இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டு பால்மாக்கள் தொடர்பில் விளம்பரங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விளம்பர தடை ஒன்று அமுல்செய்யப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது நீரிழிவு நோயின தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பயிர்களுக்கு இடப்படும் பசளையும் காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சில பசளைகளுக்கான விளம்பரங்களையும் தடைசெய்யவேண்டும் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.இந்த யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten