[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:33.08 AM GMT ]
பிரமந்தனாறு சுண்டிக்குளம் வீதியில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடித்துக் கொலை செய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வெளிச்சம் இல்லாமல் செல்வதாகவும் இதனால் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அவருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் இறந்தவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பாக நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:44.55 AM GMT ]
சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இரத்தினக் கற்களை கடத்தியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பேருவளையைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலப் பவளம், வைடூரியம உள்ளிட்ட பெறுமதி மிக்க இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆணுறைகளில் இரத்தினக் கற்களை நிரப்பி, ஆசன வாயிலில் வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடிக்கரையைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்றரை கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட தங்கம் திண்டுகல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 21.5 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்திய அறிவழகன் என்பவரின் சகோதரரான சுப்ரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகு மூலம் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten