தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்கு விசேட பாதுகாப்பு- கலகங்களை தடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 02:24.13 AM GMT ]
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் அதிகளவு வன்முறைகள் இடம்பெறும் பிரதேசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பெப்ரல், பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் குழப்ப நிலைமைகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் அவர்களது தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியக் கூடாது.
தேர்தல் சட்டங்களை பாதுகாக்கக் கூடிய வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பிரதேசத்தின் பல இடங்களில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தாக்குதல், அச்சுறுத்தல், வாகனங்களைச் சேதப்படுத்தல், காரியாலயங்களை சேதப்படுத்தல் என பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கபே கோரியுள்ளது.
சில தரப்பினர் ஆயுதங்களுடன் பேரணிகளில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
கலகங்களை தடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம்
கலகங்களை தடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கலகங்களை தடுக்கவும் குற்றச் செயல்களை தடுக்கவும் அரசாங்கம் பொலிஸ் கட்டளைச் சட்டத்தை திருத்தி அமைக்க உள்ளது,
148 ஆண்டுகள் பழமையான பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் மாற்றம் செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.
சட்டத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட உள்ளது.
சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள ஆறு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgr4.html#sthash.PpOsWI0E.dpuf
மனித உரிமைகள் சபையிலும் பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு ஆதரவு!- பாகிஸ்தான்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 02:06.03 AM GMT ]
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நேற்று நவாஸ் செரீப்பை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தமது உதவிகளை வழங்கியது.
அதேநேரம் இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் செரீப் குறிப்பிட்டார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgr1.html#sthash.php8rCV9.dpufஇலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தமது உதவிகளை வழங்கியது.
அதேநேரம் இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் செரீப் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten