தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

பா.உறுப்பினர் சிறீதரன் புலனாய்வுப் பிரிவினரால் 5வது தடவையாகவும் விசாரணை

யாழில் சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்கள் கைது
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:40.57 PM GMT ]
யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்கள் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர். குறித்த இளைஞர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.

பா.உறுப்பினர் சிறீதரன் புலனாய்வுப் பிரிவினரால் 5வது தடவையாகவும் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 09:57.04 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் இரண்டரை மணிநேரம் தொடர் விசாரணையொன்றினை இன்று மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 9மணி தொடக்கம் இந்த விசாரணை நாடாளுமன்ற உறுப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனடாவில் ஆற்றிய உரை ஒன்று தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இராணுவம் மக்களுடைய சொத்துக்களை அபகரித்ததாகவும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என உரையாற்றியதாகவும் அந்தச் செய்தி இலங்கையிலுள்ள, சிங்கள ஊடகமொன்றில் வெளியானதாகவும் விசாரணையின்போது வினவப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை என கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனைத்தையும் மறுத்துள்ளார்.
இதனையடுத்து விசாரணையாளர்கள் விசாரணை அறிக்கை ஒன்றினைப் பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த சம்பவம் வடக்கு மகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களையும், கட்சியின் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தும் வகையில், மேற்கொள்ளப்பட நடவடிக்கை எனத்தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் எமது பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் விசாரணைக்குட்படுத்தப்படும் 5வது சந்தர்ப்பம் இ துவாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten