இது தொடர்பாக இங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த இங்கு உரையாற்றுகையில்,
பால்மா பிரச்சினைக்கும் வெலிவேரிய பிரச்சினைக்கும் முடிச்சுப் போட வேண்டாம். பால் மா மக்களின் உணவோடு தொடர்புபட்டது. வெலிவேரிய சம்பவத்தை மூடி மறைப்பதற்காக பால்மா பிரச்சினையை நாம் கையில் எடுக்கவில்லை. வெலிவேரியவில் இடம்பெற்றது ஒரு துர்ப்பாக்கியமான சம்பவமாகும். இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கலாகாது. இச் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் ஆராயப்பட்டும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாது அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இராணுவத்தினரும் தனியாக குழுவொன்றை அமைத்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனவே அரசாங்கம் இதனை மூடி மறைக்க முயல்கின்றது என்ற குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையும் இல்லை. அரசியல் லாபத்துக்காக பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகள் முடிவுறும் போது தான் துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்ற தகவலை வெளியிட முடியும். அதுவரையில் குற்றவாளிகளை எம்மால் அடையாளப்படுத்த முடியாது.
தீர்வு ஒரு புறம் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் அதேவேளை மறுபுறம் வெலிவேரிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர் காரணமாகவே குடிநீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அப் பிரதேச மக்களுக்கு பவுசர்கள் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருவதோடு நிரந்தரமாக சுத்தமான குடி நீரை வழங்குவதற்காக குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே வெலிவேரிய ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten