மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
தமிழினத்தை இழிவுபடுத்தும் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எதிர்த்து நேற்று 4 மணி தொடக்கம் 6 வரை இடம்பெற்ற இம் முற்றுகைப் போராட்டம், பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் உணர்வோடு, கடும் மழைக்கு மத்தியிலும் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எதிர்த்து கோசங்களை எழுப்பியும் கையில் பதாகைகளை தாங்கியவாறும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
மெட்ராஸ் கபே படத்தை ஏன் திரையிடக்கூடாது என வலியுறுத்தி சினிவோல்ட் தலைமையகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இறுதி நிகழ்வாக மாலை 6 மணியளவில் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் இறுதியுரையுடன் முற்றுகைப் போராட்டம் நிறைவு செய்து வைக்கப்பட்டது
Geen opmerkingen:
Een reactie posten