தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

இந்தியாவுக்கு எதிராக இலங்கை சதி?



இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பயிற்சிகளை பெற்று வரும் தீவரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கம் வசதிகளை வழங்கி வருவதாக இந்திய உளவு பிரிவினரை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பயிற்சிகளை பெற்ற எட்டு லக்சர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பாய் நகரில் தாக்குதல் நடத்த இலங்கை ஊடாக மும்பாய் வந்துள்ளதாக இந்திய உளவு துறை மஹாராஸ்ட்டிரா மாநில பொலிஸாருக்கு அறிவித்திருந்தாக இந்திய ஆங்கி்ல பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு முன்னர் மும்பாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் லக்சர் இ தொய்பா தீவிரவாதிகளே நடத்தியிருந்தனர்.
பாகிஸ்தானில் பயிற்சிகளை பெற்ற தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் 28 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் முகாம் ஒன்றில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவு துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்த வெளியேறும் தீவிரவாதிகள், இலங்கைக்கு செல்வதாக கூறியே அங்கிருந்து வருகின்றனர் என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை வரும் தீவிரவாதிகள் பயிற்சிகளுக்காக இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றாலும் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறியமை சம்பந்தமாக எவ்விதமான பதிவுகளும் விமான நிலையத்திலோ அல்லது கடவூச்சீட்டுகளிலோ பதியப்படுவதில்லை என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சிகளை முடித்து கொண்டு இவர்கள் இந்த நடைமுறை மூலமாகவே மீண்டும் இலங்கை திரும்புகின்றனர். இவர்கள் நாட்டுக்குள் வந்தமைக்கான எந்த பதிவுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இவர்கள் இலங்கை திரும்பிய பிறகு, மீண்டும் இலங்கையில் இருந்து திரும்புவது போல் இந்தியாவுக்குள் சென்று விடுகின்றனர்.
கடந்த 17 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் கணனி கட்டமைப்பு சுமார் ஒரு மணிநேரம் செயலிழந்தது.
இப்படியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே கணனி கட்டமைப்பில் செயற்கையான செயலிழப்புகள் செய்யப்படுவதாக தமக்கு ஏற்கனவே கிடைத்திருந்த தகவல்களை அடுத்து, இது தொடர்பில் தாம் உன்னிப்பான கவனத்தை செலுத்தி வந்தாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
கேந்திர முக்கியத்துவமிக்க விமான நிலையம் போன்ற இடங்களில் கணனி கட்டமைப்புகளை செயலிழக்க செய்ய முடியாது. அப்படி செயலிழந்தாவும் இதனை ஒரு மணிநேரத்திற்குள் மீள இயங்க செய்ய முடியும். அதனை செய்ய கூடிய திறமைசாலி எவரும் அங்கு இருக்கவில்லையா?. இது முதல் தடவையாக இருக்க முடியாது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடப்பது ஓரளவு வெளியில் தெரியவந்தாலும் மத்தள விமான நிலையத்தில் என்ன நடக்கின்றது என்பது எவருக்கும் தெரியாது. அங்கு செய்தியாளர்களும் இல்லை. அத்துடன் இந்த விமான நிலையத்தின் அனைத்து துறைகளுக்கு ராஜபக்ஷவினரின் ஆதரவாளர்களே இணைத்து கொள்ளப்பட்டனர். என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தென்னிந்தியாவில் தாக்குதலை நடத்தும் பொருட்டு இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தளங்களை கொண்டிருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மறுப்புத் தெரிவித்ததுடன், குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo2.html#sthash.tqsK9vHz.dpuf

Geen opmerkingen:

Een reactie posten