தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

நாடு முழுவதும் ராஜபக்ஷ பயங்கரவாதம் வியாபித்துள்ளது: மங்கள சமரவீர

காவி உடையில் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பௌத்த பிக்கு கைது- ரயில் மோதி பெண் பௌத்த துறவி மரணம்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 09:27.39 AM GMT ]
பௌத்த காவி சீருடையணிந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபரை லக்கல பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பௌத்த துறவியாக இருந்து பிறகு துறவறத்தை துறந்து விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனைவியை வாழ வைப்பதற்காக காவி உடையணிந்து, விகாரைகளுக்குள் சென்று பிக்குகளின் பொருட்களை கொள்ளையிடும் நடவடிக்கைகளில் இந்த நபர் பலகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
மாத்தளை பொல் கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் டிஜிட்டல் கமரா கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, மினிரன்கெட்டிய பிரதேசத்தில் வீட்டில் மனைவியுடன் இருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்த காவி உடையும் கொள்ளையிடப்பட்டதாக கூறப்பட்ட டிஜிட்டல் கெமராவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
மகரகமவில் ரயில் மோதி பெண் பௌத்த துறவி மரணம்
மகரகம ஸ்ரீ தேவானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் ரயில் மோதி பெண் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என மகரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை பாதுக்கவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதியே இவர் பலியாகியதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த பெண் பௌத்த துறவி இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ராஜபக்ஷ பயங்கரவாதம் வியாபித்துள்ளது: மங்கள சமரவீர
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 10:13.32 AM GMT ]
வெலிவேரியவில் ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே பயன்படுத்தப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷவினரது பயங்கரவாதத்திற்கு கீழ்ப்படியாமல் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து கொள்ளுமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் தாக்குதலுக்கு கட்டளையிட்டது யார் என்பது கண்டுப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையானது திருடனின் தாயிடம் போய் மறைவிடத்தை கேட்பது போன்றது.
வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் மற்றுமொரு பயங்கரவாதம் வியாப்பித்து வருகிறது.
அதிகார போதை தலைக்கேறி போன நபர்களும், அவர்களின் உறவிகள், சகாக்கள் என்று சகலரும் அதிகாரத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் முழு நாட்டுக்கும் வினையாக மாறியுள்ளது.
ஜனாதிபதியின் பிள்ளை விளையாட்டு மைதானத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடுவரை தாக்கும்போது, பிரதேச மட்டத்தில் இருந்து தலைவர்களின் பிள்ளைகளும் பாடசாலை அதிபர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆசிரியர்களை மண்டியிட வைத்து, அரச ஊழியர்களை மரத்தில் கட்டி வைத்து மேற்கொள்ளப்படுமு் மற்றுமொரு ராஜபக்ஷ பயங்கரவாத்தை தினமும் பாரக்கவும் கேட்கவும் முடிகிறது.
தெரணியலை தோட்டத்தில் தமது வியாபாரிகளுக்கு தடையாக இருக்கும் தோட்ட அத்தியட்சகர்களை படுகொலை செய்வதும் ராஜபக்ஷ பயங்கரவாதிகள்தான் என்பதில் எந்த ரகசியமும் இல்லை.
அதேநேரம் ராஜபக்ஷ பயங்கரவாதிகளின் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களால் உலகில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் நாடுகளில் இலங்கை பிரதான நாடாக மாறியுள்ளது.
தினமும் 7 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் 03 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பொலிஸ் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்காலையில் இடம்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியின் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அணியுடன் சம்பந்தப்பட்ட பிரதேச சபை தலைவர் இருந்தது போல், நாட்டில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் உட்பட 80 சதவீதமான குற்றச் செயல்களின் பின்னணியில் அதிகார போதை தலைக்கேறி போன ராஜபக்ஷ பயங்கரவாதிகளே இருக்கின்றனர் என்பது தெளிவானது.
தமது நெருக்கமான அரசியல்வாதிகளை பயன்படுத்தி மட்டுமல்லாது இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி ராஜபக்ஷவினர் பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜபக்ஷ பயங்கரவாதத்தை கொண்டு நடத்தும் பொறுப்பு இராணுவத்திற்கும் பொலிஸூக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten