இந்தியாவின் சென்னை நகரை தளமாக கொண்ட இந்தியன் வங்கி மேலும் மூன்று கிளைகளை அடுத்த வருடம் இலங்கையில் திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியன் வங்கி, தனது புதிய கிளைகளை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் திறக்கப்படும் என இந்தியன் வங்கி்யின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான டி.எம். பாஷின் தெரிவித்தார்.
இந்த புதிய கிளைகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைகக்கு செல்ல உள்ள இந்தியன் வங்கியின் தலைவர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகழரை சந்தித்து புதிய கிளைகள் திறப்பது தொடர்பில் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியன் வங்கியின் இரண்டு கிளைகள் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டன.
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இலங்கையில் தமிழர்கள் வாழும் இரண்டு பகுதிகள் உட்பட மூன்று பிரதேசங்களில் வங்கி கிளைகளை திறக்க இந்தியன் வங்கிக்கு அனுமதி வழங்கியது.
Geen opmerkingen:
Een reactie posten