தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

இலங்கை தூய்மையான நாடு - இந்தி நடிகர் ரன்பீர் கபூர்!

தாய்லாந்து இளவரசி இலங்கைக்கு விஜயம்
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 04:37.54 AM GMT ]
தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் (Maha Chakri Sirindhorn) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இவர், இலங்கையின் பலபாகங்களை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிகிரியா, பொலனறுவை, அநுராதபுரம், கண்டி, பேராதனை பூங்கா ஆகிய இடங்களை இவர் பார்வையிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

இலங்கை தூய்மையான நாடு - இந்தி நடிகர் ரன்பீர் கபூர்
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 06:28.49 AM GMT ]
இலங்கை தூய்மையான நாடு மட்டுமின்றி ஆச்சரியமான நாடு என இந்தி திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்தார்.
ரன்பீர் கபூர் நடிக்கும் போம்பே வெல்வெட் என்ற திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் நடிப்பதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார். இலங்கை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இலங்கையை மிகவும் நேசிக்கின்றேன். நாங்கள் இலங்கையில் எமது திரைப்பட காட்சிகளை பல நாட்களாக ஒளிப்பதிவு செய்து வருகிறோம். எந்த படப்பிடிப்பிலும் அனுபவிக்காத மகிழ்ச்சியை இலங்கையில் அனுபவித்துள்ளேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten