தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 5626 பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 421 அதிகாரிகளுக்கும், 5205 உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பத்து பேர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களும் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஐந்து சிரேஸ்ட படையதிகாரிகளுக்கு தண்டனை அடிப்படையில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten