தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

காணாமல் போன சிறுவன் ஓட்டமாவடியில் சடலமாக மீட்பு - 14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சிறிய தந்தை !


ஓட்டமாவடி மடுவத்து வீதியில் சிறுவனொருவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கற்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தை, அப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்ற ஒருவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.

இதே வேளை, செம்மண்ணோடை, பாடசாலை வீதியைச் சேர்ந்த மீறா லெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற 11 வயது சிறுவனை கடந்த 17.08.2013ம் திகதியிலிருந்து காணவில்லையென 18.08.2013ம் திகதி வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போன மீறா லெப்பை முஹம்மட் ஹிமாஸுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சிறிய தந்தை
14 மாத குழந்தையின் தலையில் குட்டி கொலை செய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலையாளியான குழந்தையின் சிறிய தந்தையை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் என்.டப்ளியூ. லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
விஷம் அருந்திய உடபுஸ்ஸல்வாவை ரபான தோட்டத்தில் வசித்து வரும் 38 வயதான ஜே.எம். சூரசேன என்ற சந்தேக நபர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் நீதவான் வைத்தியசாலைக்கு சென்று அந்த நபரை பார்வையிட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 14 மாத குழந்தையான அமிர்தராஜா அனுஷா என்ற குழந்தையையே சந்தேக நபர் கொலை செய்துள்ளார்.
சந்தேக நபரின் மனைவி கடந்த 16 ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் குழந்தையை தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மறுநாள் குழந்தை சுகவீனமுற்றிருப்பதாக கூறி சந்தேக நபர் குழந்தையை வெலிமடை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVhvy.html#sthash.ulYKGzhJ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten