அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கிய சென்ற இராணுவ டிப்பெண்டர் வாகனம் நேற்று முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் கோடகல்லு பிரதேசத்தில் வீதியில் இருந்து விலகி கால்வாய் மதில் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 7 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுச்சுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு சென்று கொண்டிருந்த போது, அவருக்கு பாதுகாப்பு வழங்கி சென்ற டிப்பெண்டர் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
Geen opmerkingen:
Een reactie posten