தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

யாழில் 13 வயது சிறுவனை காணவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 10:01.03 AM GMT ]
யாழ். கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனைக் காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி கருணாநிதி நிலக்ஷன் (13 வயது) என்ற சிறுவன் மாலைநேர வகுப்பிற்கு சென்றுள்ளார்.
எனினும், அவர் இதுவரை வீடு திரும்பவில்லையென குறித்த சிறுவனின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten