தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வில்லை! பேச்சுவார்த்தையில் குழப்பம்!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 07:58.20 AM GMT ]
யாழ் - கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாது முடிவடைந்துள்ளது
இந்தப் பேச்சுவார்த்தையில் யாழ் கொழும்பு பஸ்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணமான 11 இலட்சம் ரூபாவை குறைக்க வேண்டுமெனவும், அனுமதிப்பத்திரம் வழங்கப்படாதவர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமெனவும் பஸ்களில் கப்பம் அறவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பஸ் உரிமையாளர்கள் அங்கு வலியுறுத்தினர்.
இவற்றுக்கு முறையான பதில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பேச்சுவார்த்தையை இடையிலேயே கைவிட்டு பஸ் உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறியதாக ஐக்கிய தேசியக் கட்சி வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளரும் யாழ். கொழும்பு பஸ் உரிமையாளருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக துவாரகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்;
யாழ் கொழும்பு தனியார் பஸ் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக போக்குவரத்து மார்க்க அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கும், அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்குமிடையே நேற்று வியாழக்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.
இதில் போக்குவரத்து ஆணைக்குழு தலைவர், பணிப்பாளர் உட்பட ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸ் போக்குவரத்து பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் மற்றும் பல பஸ் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு முறையான பதில் எதனையும் வழங்கவில்லை.
குறிப்பாக யாழ். கொழும்பு பஸ்களுக்கு மாத்திரம் 11 இலட்சம் ரூபா மார்க்க அனுமதிப்பத்திரத்திற்காக அறவிடப்படுகிறது. ஆனால், மற்றைய பகுதி பஸ்களுக்கு 3000 ரூபாவே அறவிடப்படுகின்றது. அத்தோடு இ.போ.ச. பஸ்களுக்கு அதுவும் கிடையாது.
இந்நிலையில் யாழ். கொழும்பு இ.போ.ச. பஸ்கள் பயணியொருவரிடம் 900 ரூபாவை கட்டணமாக அறவிடுகிறது. ஆனால், எங்களால் அந்த கட்டணத்திற்கு ஓட முடியாது. இதனால் அந்தக் கட்டணத்திற்கு ஓட வேண்டுமென்றால் மார்க்க அனுமதிப்பத்திரத்தை குறைக்க வேண்டும்.
இதேவேளை, மார்க்க அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு பொலிஸார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை நிறுத்த வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தினோம்.
அத்தோடு இன்னும் சில மாதங்களில் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையும் ஆரம்பித்து விடும். இந்நிலையில், அதிக கட்டணத்தினுடனான மார்க்க அனுமதிப்பத்திரத்தை பெற்று நாம் சேவையில் ஈடுபடுவது என்பது முடியாத காரியம்.
ஆகவே, மார்க்க அனுமதிப்பத்திர கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லையேல் சில மாதங்களில் பஸ் சேவையிலிருந்து நாம் விலகிக் கொள்ள நேரிடும் என வலியுறுத்தினோம்.
இந்நிலையில், எமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து முறையான பதில்கள் கிடைக்கவில்லை. இதனால் நாம் இடையிலேயே பேச்சுவார்த்தையிலிருந்து எழுந்து வெளியேறி விட்டேம் என்றார்.
வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 08:56.02 AM GMT ]
யாழ்.வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்து அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பல்­லப்பை பகுதி கிணறொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக வெளி­யான செய்­தி­களில் எவ்வித உண்­மையும் இல்லை என்று இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெரி­வித்தார்.
பல்­லப்பை பிர­தே­சத்தில் சுத்­தி­க­ரிப்பு பணியின் போது 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக இணை­யத்­த­ளங்­களில் வெளி­யான செய்தி தொடர்­பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சர்­வ­தேச இணை­யத்­த­ளங்கள் ஊடாக இந்­நாட்­களில் இலங்கை தொடர்­பான மிகவும் தவ­றான புனை­யப்­பட்ட பல கட்­டுக்­க­தைகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இவை இலங்­கையின் பெய­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்த முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டாகும்.
பல்­லப்பை என்ற பகு­தியில் அவ்­வா­றான எந்­த­வொரு சம்­ப­வமும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கோ பொலி­ஸா­ருக்கோ இது­வரை பதிவாகவில்லை. பல்­லப்பை பிர­தேச மக்­க­ளுக்குக் கூட அப்­ப­டி­யொரு சம்­பவம் இருப்பது தெரி­யாது.
இது தொடர்பில் நாமும் எமது அதி­கா­ரி­களை ஸ்தலத்­துக்கு அனுப்பி ஆராய்ந்தோம். எனினும் அங்கு அப்­படி எதுவும் பதி­வா­க­வில்லை என தெரி­வித்தார்.
யாழ்.வட­ம­ராட்சி, பல்­லப்பை பகுதி கிண­றொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் அங்கு சுத்­தி­க­ரிப்பு பணியில் ஈடு­பட்ட பொது­மக்­க­ளினால் மீட்­கப்­பட்­ட­தா­கவும், இந்­நி­லையில் அங்கு சுத்­தி­க­ரிப்பு பணி­களை தொடர வேண்டாம் என இரா­ணுவம் பொது­மக்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தா­கவும் செய்தி வெளியாகியிருந்தது.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten