தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

ஐநா வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித நீக்கம்? சவேந்திர சில்வா நியமனம்?

வாக்காளர் விபரம் எதனையும் படையினருக்கு வழங்க வேண்டாம்! முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர் பணிப்பு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 03:51.55 AM GMT ]
வாக்காளர் தொடர்பான எந்தவொரு விபரங்களையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம்.  படையினர் நிர்ப்பந்தித்தால் அது தொடர்பில் எனக்கு அறிவியுங்கள் அல்லது அவர்களை என்னுடன் பேசச் சொல்லுங்கள். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் நாலக்கரத் நாயக்க கிராம அலுவலர்களுக்குப் பணித்துள்ளார்.
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடலின் போதே உதவித் தேர்தல் ஆணையாளர் இவ்வாறு பணித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கிராம அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கரைதுறைப்பற்றில் கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் அப்பகுதி வாக்காளர் எண்ணிக்கை, அவர்களின் குடும்ப விபரம் உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு நிர்ப்பந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் "கபே' அமைப்பினால் தேர்தல் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
படையினர் கிராம அலுவலர்களை நிர்ப்பந்திப்பதால் அவர்கள் வாக்காளர் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் நடந்த கலந்துரையாடலின் போது, அவ்வாறான விவரங்களை எதனையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம் என்றும் அப்படி ஏதாவது சம்பவம் நடந்தால் அதுகுறித்து தனக்கு அறிவிக்குமாறும் உதவித் தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார்.

ஐநா வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித நீக்கம்? சவேந்திர சில்வா நியமனம்?
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 12:30.15 AM GMT ]
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித கோஹனவை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசின் இந்த தீர்மானத்தை அடுத்து அந்த பதவிக்கான உட்தரப்பில் போட்டிகள் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வெளிவிவகார அமைச்சிலும் அதற்கு வெளியிலும் பலர் இந்த பதவியை பெற முயற்சித்து வருகின்றனர்.
இவர்களில் முன்னணியில் இருப்பவர் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஐக்கிய நாடுகளுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என தெரியவருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten