தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

மெட்ராஸ் கபே திரைப்படத்தை உலகில் எங்கும் திரையிட அனுமதிக்க போவதில்லை: சீமான்

[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 07:40.57 AM GMT ]
மெட்ராஸ் கபே படத்தில் முழுக்க முழுக்க ராஜீவ்காந்தியை கதாநாயகனாகவும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை வில்லன் போலவும் சித்தரித்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷ தயாரிப்பில், சோனியாகாந்தி இயக்கத்தில், இந்திய உளவுத்துறையான றோ திரைக்கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட படம் போல் இந்த படம் அமைந்துள்ளது.
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்கள் மத்தியில், விடுதலைப்புலிகள் மிக கேவலமானவர்கள் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
இது, முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம். இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் வெளியிட விடமாட்டோம் என்றார்.
ஜான் ஆபிரகாம் நடித்து, சூர்ஜித் சிர்க்கார் இயக்கியுள்ள இந்தி படம், மெட்ராஸ் கபே. இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.
படத்தில் தமிழர்களை தீவிரவாதிகள் போலவும், கேவலமாகவும் சித்தரித்து இருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க போவதில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மெட்ராஸ் கபே  படம் சென்னையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த படத்தை பார்த்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten