தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

தன்னை சர்வாதிகாரி என்று கூறுவதன் காரணம் தெரியவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்! படகுகள் மாத்திரம் பறிமுதல் செய்யப்படும்!- இலங்கை
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 01:54.47 AM GMT ]
இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யாமல் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய ஆலோசிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்திற்கொண்டு அத்துமீறும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்கும் அதேநேரம், அவர்களின் படகுகளை மட்டும் பறிமுதல் செய்ய ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய யாழ்ப்பாண மீனவர் சமூகத்தின் பிரதிநிதி அந்தோனிபிள்ளை எமிலியாம்பிள்ளை, இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhwz.html#sthash.5EZ6i6sP.dpuf

தன்னை சர்வாதிகாரி என்று கூறுவதன் காரணம் தெரியவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 01:30.21 AM GMT ]
தான் ஒரு சர்வாதிகாரியாக ஏன் அடையாளப்படுத்தப்பட்டேன் என்பது தொடர்பில் தனக்கே தெரியாது உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதியான தன்னை சர்வாதிகாரி என்று கூறுமளவுக்குப் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நான் தேர்தல்களில் வாக்குக் கேட்பதானது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே தவிர சர்வாதிகாரத்தனத்துக்கு அல்ல.
இந்த நாட்டில் இன்று பேச்சு சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் முழுமையாகவுள்ளது.
இந்த நிலையில் தன்னை ஒரு சர்வாதிகாரி எனக் கூறுவது அநியாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhwy.html#sthash.s2ngp1Cv.dpuf

Geen opmerkingen:

Een reactie posten